நாளை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் அமெரிக்கா அணியிடம் தோல்வி அடைந்து பின்தங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் நயன் மங்கியா பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிடக்கூடாது என கடுமையாக கூறியிருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக கொண்டுவரப்பட்ட பாபர் அசாம் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் தடுமாற ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் ஆண்டுகளாக அவருடைய பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாபர் அசாமை விராட் கோலி உடன் பலர் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். சமகாலத்தில் விராட் கோலிக்கு சமமான வீரராக பாபர் அசாம் இருக்கிறார் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து நயன் மோங்கியா கூறும்பொழுது “கடந்த சில வருடங்களாக பாபர் அசாம் பேட்டிங் தடுமாறி வருகிறது. அவர் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தொடர்ந்து பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற அழுத்தத்தை தனக்குத்தானே கொடுத்து வருகிறார். இந்த அழுத்தம் இருப்பதோடு அணியின் மற்ற வீரர்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இது அவருக்கு கடும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.
இந்த நிலையில் நீங்கள் அவரை விராட் கோலி உடன் ஒப்பீடு செய்கிறீர்கள். ஆனால் அவர் விராட் கோலியின் பக்கத்தில் கூட கிடையாது. இதனால் பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான அழுத்தம் இருக்கிறது. அவர் எப்பொழுது நன்றாக விளையாடுகிறாரோ அப்பொழுது அந்த அணி ஓரளவுக்கு சிறப்பாக இருக்கிறது. அவர் வெளியேறினால் அந்த அணியும் சரிந்து விடுகிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லையா?.. இந்த 4 டீம்தான் டி20 உ.கோ செமி பைனலுக்கு வரும் – அஸ்வின் கணிப்பு
மேலும் இந்தியா பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அனுபவத்துடன் வலிமையானதாக இருக்கிறது. அவர்கள் நிலைமைக்குத் தகுந்தபடி சரியான ரண்களை எடுக்க முடியும். ஆனால் பாகிஸ்தான அணியின் பேட்டிங் யூனிட் அப்படிப்பட்ட திறமை கொண்டதாக கிடையாது” என்று கூறியிருக்கிறார்.