இந்திய கிரிக்கெட்

கம்பீர் சார் விடாமல் செஞ்ச அந்த உதவி.. ஒன்றரை வருஷம் கழிச்சு வர மாதிரியே தெரியல – ஆகாஷ் தீப் பேட்டி

​காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவு குறித்துப் பேசியிருக்கிறார்.

- Advertisement -

​நீண்ட கால காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த ஆகாஷ் தீப், மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பி வெலிங்டன் ஆட்டத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓய்வில் இருந்த காலத்தைத் தனது பந்துவீச்சுத் திறனை மேம்படுத்தவும், உடல் வலிமையை அதிகரிக்கவும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

​இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ஆட்டங்கள் அவருக்கு நம்பிக்கையைத் தந்த நிலையில், நியூசிலாந்து இன்னிங்ஸில் கிளென் பிலிப்ஸின் விக்கெட் உள்ளிட்ட மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தித் தனது வருகையைப் பதிவு செய்தார்.

​இதுகுறித்து ஆகாஷ் தீப் பேசும்போது “கம்பீர் சார் அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரிப்பார். அந்த நேரத்தில் எனது பந்துவீச்சிலும், மேம்படுத்த வேண்டிய பகுதிகளிலும் உழைத்தேன். எனக்கு இன்னும் வலிமை தேவைப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது போலவே எனக்குத் தோன்றவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது “இந்தியா ஏ அணிக்காக நான் வீசிய பந்துவீச்சில் மகிழ்ச்சியாக இருந்தேன். பிலிப்ஸ் க்கு வீசியது அது ஒரு மாயப் பந்து அல்ல. நான் ஒரே பகுதியில் பந்துவீச முயற்சித்தேன். அந்தப் பந்தில் கூடுதல் முயற்சி போட்டு, எனக்கு வேண்டியதைப் பெற முடிந்தது என்று கூறி இருக்கிறார்”.

- Advertisement -
Published by