இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் கம்பீர் தன்னையும் தன் குடும்பத்தையும் மேலும் கங்குலியையும் அசிங்கமாக பேசியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டி இருக்கிறார்.
இவர் நேற்று கம்பீர் சொன்ன சொல்லை காப்பாற்றாத ஒரு நயவஞ்சகர் என்று கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சரியான வீரர்களுக்கு கம்பீர் வாய்ப்பு கொடுக்காதது இவருடைய குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
கம்பீரை வீரர்கள் ஆதரிக்க காரணம் இதுதான்
இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது “கம்பீரை நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற வீரர்கள் ஏன் வெளியில் வந்து ஆதரிக்க மாட்டார்கள்? ஆகாஷ் தீப் மாதிரியான தன்னை நிரூபித்து விட்ட ஒரு பந்துவீச்சாளர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் எப்படி திடீரென ஹர்ஷித் ராணா வந்து விளையாடினார்?”
“கம்பீர் இப்படி பாரபட்சமான முறையில் அணியை தேர்வு செய்து யாருக்காவது வாய்ப்புகளை கொடுக்கிறார். இதன் காரணமாக இப்படி வாய்ப்பு பெற்ற வீரர்கள் நேரடியாக வெளியில் வந்து கம்பீரை ஆதரித்து பேசுகிறார்கள். நியாயமாக அந்த இடத்தில் ஆகாஷ் தீப் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் கம்பீர் தவறான முறையில் அணியை தேர்வு செய்தார்”
கம்பீர் கங்குலியையும் திட்டினார்
“மேலும் ஒரு ரஞ்சித் டிராபி போட்டியின் போது என்னிடம் ஏற்பட்ட சண்டையில் கம்பீர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அங்குள்ளவர்கள் கேட்டார்கள். அவர் என்னையும் என் குடும்பத்தையும் திட்டியது, மேலும் கங்குலியையும் அவர் திட்டியது என எல்லாவற்றையும் அங்கு இருப்பவர்கள் அறிவார்கள். இருந்த போதிலும் கூட யாரோ சிலர் கம்பீரை அந்த சூழ்நிலையில் காப்பாற்றினார்கள்”
இதையும் படிங்க : கான்ஸ்டாஸ் பும்ரா கிட்ட போன மாதிரி ஆடினா நிலைக்க முடியாது.. இத செய்தே ஆகணும் – ரிக்கி பாண்டிங் அறிவுரை
“அபிமன்யு ஈஸ்வரன் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய ரன் குவித்து வாய்ப்பு பெற்றார். ஆனால் அவர் இருக்கும் பொழுது எப்படி திடீரென படிக்கல் அங்கு வந்து விளையாடினார்? இதேபோல்தான் ஆகாஷ் தீப் விளையாட வேண்டிய இடத்தில் ஹர்ஷித் ராணா விளையாடினார். அங்கு ஆகாஷ் தீப்புக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.