கிரிக்கெட் தாண்டி.. தோனியால் இதிலும் சாதனை படைக்க முடியும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு – பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி

0
204

இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனியால் கிரிக்கெட் தாண்டி இதிலும் வெற்றி பெற முடியும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ், சுக்லா சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மகத்தான வீரர் தோனி

மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர். 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வடிவ உலகக்கோப்பைகளையும் பெற்று தந்த ஒரே இந்திய கேப்டன் என்ற வரலாறை தோனி படைத்திருக்கிறார். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல்லிலும் விளையாடுவார் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மகேந்திர சிங் தோனியால் கிரிக்கெட் தாண்டி அரசியலிலும் வெற்றி பெற முடியும் எனவும், ஆனால் அரசியலுக்கு அவர் வருவதும் வராததும் அவரது கைகளில் மட்டுமே இருக்கிறது என்று சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதிலும் அவரால் சாதிக்க முடியும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” தோனி ஒரு அரசியல்வாதியாக மாற முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா? என்பது அவரது கைகளில் மட்டுமே இருக்கிறது. சௌரவ் கங்குலி வங்காள அரசியலில் நுழைவார் என்று நான் நினைத்தேன். தோனி அரசியலிலும் நல்லவராக இருக்க முடியும் அவர் வெற்றி பெறுவார் அவர் மிகப் பிரபலமான மனிதர். தோனி ஒருவேளை அரசியலில் நுழைவாரா? என்று எனக்கு தெரியவில்லை. அது அவரது கைகளில் மட்டுமே இருக்கிறது. அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா? என்று நான் அவரிடம் ஒருமுறை கேட்டபோது இல்லை என்று பதில் அளித்தார்.

இதையும் படிங்க:5வது டி20யில் காயம் அடைந்த சாம்சன்.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகலா?. பிசிசிஐ கூறிய முக்கிய தகவல்

மகேந்திர சிங் தோனியை எளிதில் அணுக முடியாது அவர் கையில் ஒரு போன் கூட வைத்திருக்க மாட்டார். அவரை பிசிசிஐ தேர்வாளர்கள் கூட அவ்வளவு எளிதாக அணுக முடியாது. அவர் மொபைல் போனை ஒருபோதும் தன்னுடன் வைத்திருப்பதில்லை. அது அவருடைய இயல்பு அவர் ஒரு கொள்கை ரீதியான நபர் என்பதையும் அவர் அனைத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்பதையும் நான் கண்டிருக்கிறேன். அவரிடம் எந்த ஒரு மலிவும் அற்பத்தனமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -