2012 தாஜ் ஹோட்டல்ல அந்த சம்பவம் நடந்தது.. விராட் கோலி கிட்ட புடிச்சதே அதுதான் – ஸ்ரீகாந்த் பேச்சு

0
203
Virat

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிறது.இதன் காரணமாக பலர் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வகையில் இந்திய முன்னால் வீரர் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி 2008 ஆம் வருடம் முதல்முறையாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான. அங்கிருந்து அவர் இதுவரையில் பல பிரமிக்கத்தக்க சாதனைகளை கிரிக்கெட் உலகில் படைத்து வருகிறார்.

- Advertisement -

மிக முக்கியமாக இந்திய டெஸ்ட் கேப்டன்களில் அவரே உச்சத்தில் இருக்கிறார். மேலும் அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த காலகட்டம்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம் என்று சொல்லலாம். வேகப்பந்து வீச்சாளர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அதிக அளவு ஆதரித்த கேப்டனாக இருக்கிறார். மேலும் வெளிநாடுகளிலும் இந்திய அணியை வெற்றி பெறும் மனப்பான்மையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வைத்த கேப்டன் விராட் கோலிதான்.

மேலும் இந்திய கிரிக்கெட் தாண்டி உலக அளவில் கிரிக்கெட்டில் உடல் தகுதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய மிக முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். மேலும் கிரிக்கெட்டுக்கு புதியவர்களையும் ரசிகர்களாக உள்ளிழுத்து வரக்கூடியவர்களில் முக்கியமானவராக இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கிரிஸ் ஸ்ரீகாந்த் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுது “சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். விராட் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரிடம் இருக்கும் கற்றுக் கொள்வதற்கான ஆர்வம்தான். அவரை அழைத்து அவருக்கான ஒரு விஷயம் குறித்து ஆலோசனை சொன்னால் அவர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வார்.

நான் தேர்வு குழு தலைவராக இருந்த பொழுது 2012 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களுக்கு கிளம்புவதற்கு முன்னால் தாஜ் ஹோட்டலில் இருந்தது. அப்பொழுது ஆஸ்திரேலியா சூழ்நிலைக்கு எப்படி விளையாடினால் சரியாக இருக்கும் என, என்னுடன் விளையாடிய மொகிந்தர் அமர்நாத்தை அழைத்து விராட் கோலிக்கு ஆலோசனைகள் கூறச் சொன்னேன்.

இதையும் படிங்க : பேசாம பாபரை பேட்டிங் கோச் ஆக்கிடுங்க.. கில்லெஸ்பி இந்த வேலைய ஆஸியில வச்சுக்கோங்க – பசித் அலி விமர்சனம்

ஏனென்றால் மொகிந்தர் அமர்நாத் பவுன்ஸ் இருக்கும் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடும் நுட்பம் இருப்பவர். நான் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் விராட் கோலியை அழைத்து ஆலோசனைகள் சொன்னார். விராட் கோலியும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் நான் அழைத்ததும் வந்து அவரிடம் ஆலோசனைகளை மிக பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். இப்படி கற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதால்தான் அவர் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார்” என்று கூறினார்.

- Advertisement -