இந்திய கிரிக்கெட்

இந்தியா ஆஸி டெஸ்ட் தொடர்.. பும்ரா கூட சிராஜுக்கு பதிலா இவர்தான் விளையாடனும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வு குழு உறுப்பினருமான ஜதின் பரஞ்சப்பே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் கடந்த இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. எனவே அதனை முறியடிக்கும் விதமாக அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இந்த முறை நிச்சயமாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

இந்திய அணியின் பலம் என்பது பேட்டிங் விட அதன் வேகப்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கிறது. முகமது சமி, சிராஜ் மற்றும் பும்ரா என மும்முனை தாக்குதல் கொண்ட வேகப்பந்து வீச்சு இந்திய அணியின் முக்கிய பலமாக அமைந்திருக்கிறது. இருப்பினும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முகமது சமி காயம் காரணமாக விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஆன முகமது சிராஜ்க்கு பதிலாக இந்திய அணியில் தற்போது இடம் பிடித்திருக்கும் ஆகாஷ் தீப் விளையாட வேண்டும் என்று ஜதின் பரஞ்சப்பே சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

முகமது சிராஜ்க்கு பதிலாக இவர் விளையாட வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு டெஸ்ட் தொடருக்கு 16 பேர் கொண்ட அணி செல்லும் நிலையில் ஏதேனும் காயம் ஏற்படும் நிலையில் ஆறு அல்லது ஏழு வீரர்களை கொண்ட பேக் அப் வீரர்களும் செல்வார்கள். இந்த சூழ்நிலையில் ஷமி முழு உடற்பகுதியில் இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் முஹம்மது சிராஜுக்கு பதிலாக ஆகாஷ் தீப் நான் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஷமி ஒருவேளை உடற்தகுதியுடன் இல்லாவிட்டால் பும்ராவுக்கு அடுத்ததாக முகமது சிராஜ் இரண்டாவது பந்துவீச்சாளராக மாறுவார். ஷமி இல்லாத பட்சத்தில் ஆகாஷ் தீப் மூன்றாவது பந்துவீச்சாளராக மாற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:மனசு ரொம்ப புண்பட்டு இருக்கு.. இங்கிலாந்து செஞ்ச அதை செய்ய எங்ககிட்ட வழி இல்ல – ஷான் மசூத் வேதனை

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுக்கும் என்று நினைக்கிறேன். பும்ரா, ஷமி, சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இருப்பார்கள். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-2 அல்லது 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் என்று நினைக்கிறேன். இந்த தொடர் நடக்கும் போது காயம் யாருக்கும் ஏற்படவில்லை என்றால் இந்திய அணி டெஸ்ட் தொடரை இப்படித்தான் வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts