அடிச்சு சொல்றேன்.. இந்தியா தான் டி20 உலக கோப்பையை ஜெயிக்கும்.. இதான் காரணம் – இயான் மோர்கன் கணிப்பு

0
3152
Morgan

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்து இருக்கிறது. இதற்கு அடுத்து கிரிக்கெட் உலகம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் ஆரம்பம் முதல் நடக்க இருக்கிறது.

இந்த டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து முதல் குழு ரோகித் சர்மா தலைமையில் கிளம்பி அமெரிக்கா சென்றிருக்கிறது. ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடும் இந்தியா அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் 8-ம் தேதி விளையாடுகிறது.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை சேர்த்திருப்பதும் அதன் காரணமாக ரிங்கு சிங் சேர்க்கப்படாமல் இருப்பதும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மற்ற வகையில் எடுத்துக் கொண்டால் அறிவிக்கப்பட்ட அணி பலமானதாகவே இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் மெதுவாகவும் பந்து தாழ்வாகவும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வேகப்பந்து வீச்சில் கட்டர்களை வீசக்கூடியவர்களுக்கும், பொதுவாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் டி20 உலக கோப்பை இந்திய அணி பற்றி பேசும்பொழுது ” இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை முழுவதும் வீரர்களுக்கு ஏதாவது காயங்கள் இருந்தால் கூட, அவர்கள்தான் வலிமையான அணி. சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்திய அணியின் வலிமையும் ஆழமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்திய அணி கொண்டிருக்கும் தரத்தின் காரணமாக 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படாத வீரர்கள் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க: இங்கிலாந்து பாகிஸ்தான் 3வது டி20.. வெளியேறிய பட்லர்.. கேப்டனான சிஎஸ்கே வீரர்.. வெளியான காரணம்

இந்த உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நான் இந்திய அணியைப் பார்க்கிறேன். அவர்கள் பேப்பரில் மிகவும் வலிமையான அணியாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் இந்த அணியை மிகச் சிறப்பான முறையில் தயாரித்தால் அவர்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியும். யாரையும் அவர்களால் வீழ்த்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -