இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் சேர்க்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய மண்ணில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி வருகிற 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு 18 பேர் கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்காக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக கருதப்படும் குல்தீப் யாதவ் அந்த 18 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் குல்தீப் யாதவ் நீண்ட காலமாக தனக்கு இடுப்பு பகுதியில் இருக்கும் காயத்திற்காக சிகிச்சை எடுக்க உள்ளதாக தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆகாஷ் சோப்ரா இந்த தகவல் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறி இருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சரியம்தான் – ஆகாஷ் சோப்ரா
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் குறித்து பேசினால் அது எதிர்பார்க்கப்படும் வகையில் இருக்கிறது. தொடக்கப் போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை என்றால் அவருக்கு மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் இருக்கிறார். 18 வீரர்களை எடுத்ததற்கு பதிலாக 19 வீரர்களை எடுத்து இருந்தாலும் மூன்று சுழற் பந்து தேர்வுகளை மட்டுமே எடுக்கக் கூடிய வகையில் இருந்திருக்கும்.
ரோஹித்இதையும் படிங்க:ரோஹித் கம்பீர் அந்த உண்மையை ஒத்துக்கோங்க.. கண்ணாடி பொய் சொல்லாது – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
அதில் இப்போது மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார் குல்தீப் யாதவ் அல்ல. குல்தீப் யாதவ் நாள்பட்ட காயத்தை குணப்படுத்த வேண்டிய இருப்பதால் அவர் தேர்வு செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். ஆனால் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு செல்லவில்லை. இது எனக்கு தனிப்பட்ட முறையில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்தது. தொடரை முடித்துவிட்டு பிறகு கூட சிகிச்சை எடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து” என்று கூறியிருக்கிறார்.






