ரோஹித் கம்பீர் அந்த உண்மையை ஒத்துக்கோங்க.. கண்ணாடி பொய் சொல்லாது – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
298
Aakash

இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை தான் இந்திய அணியும் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கண்ணாடி எப்பொழுதும் பொய் சொல்லாது என்றும் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உள்நாட்டில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று தொடரையும் இழந்திருக்கிறது. 12 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு டெஸ்ட் தொடரை அதுவும் இலங்கையிடம் தோற்று வந்த நியூசிலாந்திடம் இழந்திருப்பது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

கண்ணாடியை பார்த்து ஒப்புக்கொள்ள வேண்டும்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “நாங்கள் வேறு வகையான முறையில் பேட்டிங் செய்கின்ற காரணத்தினால் நாங்கள் தற்காப்பு ஆட்டம் விளையாடுவது இல்லை. இது தற்பொழுது தெளிவாக தெரிகிறது. இதை இந்திய அணி நிர்வாகம் தான் செய்த தவறை கண்ணாடியை பார்த்து ஒத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கண்ணாடி பொய் சொல்லாது. சரிவு என்றால் ஒரு விக்கெட் விழுந்ததும் அடுத்து உடனே விக்கெட் விழுவது”

“இரண்டு விக்கெட்டுகளுக்கு இடையில் நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும். ஒரு விக்கெட் விழுந்ததும் அடுத்த விக்கெட் உடனே விழக்கூடாது. இதற்கு பேட்டிங் செய்யும் பொழுது கொஞ்சம் பொறுமை காட்டி தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் அடித்து விளையாடலாம். உங்களது சரிவை தடுக்க உங்களுக்கு தற்காப்பு ஆட்டம் தேவை”

- Advertisement -

ஒரு நாளில் செய்ததை ஒரு செசனில் செய்ய முடியவில்லை

“எப்போதாவது ஒருமுறை ஆக்ரோஷமாக விளையாடுவதின் மூலமாக சரிவை தடுக்க முடியும். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த முறையில் சரிவை தடுக்க முடியாது. நீங்கள் செஷன் செஷனாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும். இதை உங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது. நீங்கள் விக்கெட் கொடுக்காமல் ஒரு செஷனையும் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க : பிசிசிஐ இந்திய ரசிகர்களிடம்.. திடீர் மன்னிப்பு கேட்ட முகமது ஷமி.. உருக்கமான வேண்டுகோள்

” நாம் 2001 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நமக்கு இணையற்ற ஆண்டு என்று பேசுகிறோம். அப்பொழுது நாம் ஒரு நாள் முழுக்க விக்கெட் கொடுக்காமல் விளையாடினோம். பிறகு ஆஸ்திரேலியா சென்று அங்கும் ஒரு நாள் முழுக்க விட்டுக் கொடுக்காமல் விளையாடியிருக்கிறோம். ஆனால் தற்பொழுது ஆடுகளத்தில் கொஞ்சம் சவால் இருந்தால் கூட ஒரு செஷன் விக்கெட் இல்லாமல் விளையாட முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -