இந்திய கிரிக்கெட்

கில் இந்த முறை பேட்டிங்ல முக்கிய 2 மாற்றத்தை செஞ்சிருக்காரு.. அவர் சிறப்பா இருக்க காரணம் இதுதான் – ரவி சாஸ்திரி கருத்து

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கில் தனது பேட்டிங்கில் செய்துள்ள மாற்றம் குறித்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து இந்திய கேப்டன் கில் சதம் அடித்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் அசாருதீன் மற்றும் விராட் கோலி உடன் இணைந்திருக்கிறார்.

கில் டெஸ்ட் பேட்டிங் பிரச்சனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்லுக்கு தற்காப்பு ஆட்டத்தில் சிக்கல் இருந்தது. அவர் மென்மையான முறையில் பந்தை தடுத்து விளையாடாமல், கைகளை மிகக் கடினமாக கொண்டு தடுத்து விளையாடுவார். இதன் காரணமாக அதிக முறை ஸ்லிப்பில் சிக்குவார். மேலும் அவருடைய முன் காலை அதிகமாக வலது புறமாக நகர்த்தி வைப்பார். இதனால் எல்பிடபிள்யு ஆகும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தது.

இதன் காரணமாக ஆசியாவை தாண்டி கில் வேறெங்கும் டெஸ்ட் சதம் அடித்தது கிடையாது ஆசியா தாண்டி டெஸ்ட் சதம் அடிக்காமலே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக்கப்பட்டதற்கு பெரிய விமர்சனங்கள் வெளியில் இருந்தது. இந்த நிலையில் கேப்டன் ஆன முதல் மற்றும் இரண்டாவது போட்டியில் தொடர்ந்து சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி விளக்கம்

இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “கில்லின் செயல் திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் கண்ட்ரோலாக இருந்தார். மேலும் அவர் தனது தற்காப்பு ஆட்டத்தில் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் முதல் முறை இங்கிலாந்து வந்த பொழுது பந்தை கடினமான கைகளால் விளையாடினார். இப்போது அவருடைய அப்பர் ஹேண்ட் நல்ல கண்ட்ரோலில் இருக்கிறது. மேலும் பந்தை நன்றாக வர விடுகிறார். பிறகு அதை மென்மையான முறையில் விளையாடுகிறார். அதேசமயத்தில் தாக்கி விளையாடும் பொழுது அனைத்து ஷாட்களையும் விளையாடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு ஒரே ஒரு வீக்னஸ் இருக்கு.. இங்கிலாந்து இத வேணா யூஸ் பண்ணிக்கோங்க – புஜாரா பேச்சு

கில் பேட்டிங் பற்றி ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “கில் பேட்டிங் செய்யும் விதம் அற்புதமாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது. அவர் கேப்டனாகவும் மிகவும் சிறப்பாக இருக்கிறார். அணிக்காகவும் அணி உடனும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு மிக தெளிவாக தெரியும். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts