கோலி பண்ட் இல்லை.. இந்த 22 வயது பையன்தான் ஆஸி பவுலர்ஸ்க்கு தண்ணி காட்டுவார் – ரவி சாஸ்திரி பேட்டி

0
435

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணி தனது பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பேட்டிங் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

வேகப்பந்து வீச்சில் சிறப்பாக திகழும் இந்திய அணி, சமீப காலமாக பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தால் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தொடரை இழந்தது. இது இந்திய அணிக்கு பெரிய விமர்சனத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இதை கவனத்தில் கொண்டு இந்திய அணி தற்போது பேட்டிங்கில் முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற தகவல் உறுதியாக தெரியாத நிலையில், அதற்கு பதிலாக மாற்றுவீரரை களம் இறக்கும் முயற்சியில் இந்திய அணி ஆலோசித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

22 வயது பையன் முக்கிய பங்கு வகிப்பார் – ரவி சாஸ்திரி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முன்னிலையில் இருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடினால் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்துவார். அவர் நன்றாக ஸ்பின் விளையாடக் கூடிய வீரராக இருக்கிறார். மேலும் தனது சொந்த பாணியில் விளையாடும் வீரராக இருக்கிறார். ஷாட் புக்கில் உள்ள அனைத்து ஷாட்களையும் பெற்று இருக்கிறார் என்று தெரியும்.

இதையும் படிங்க:இந்திய அணி கவனமா இருங்க.. பெர்த் பிட்ச் இந்த விஷயத்துல மோசம்னு எங்களுக்குதான் தெரியும் – ட்ராவிஸ் ஹெட் பேட்டி

நன்றாக பேட்டிங் செய்து பார்வையாளர்களை மகிழ்விக்க கூடியவர். சிறப்பாக விளையாடினால் பெரிய ரன்கள் குறிக்கும் திறன் உள்ளது என்று நன்றாக தெரியும். நீங்கள் தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்கள் அடிக்கவில்லை. நீங்கள் ரன்கள் குவிக்க வேண்டும் என்கிற பசியுடன் தரமும், திறமையும் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். எனவே ரவி சாஸ்திரி சொன்னது போல இந்த 22 வயதான ஜெய்ஸ்வால் திறமையாக விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -