இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடவதற்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களை அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருமாறி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் இடம் பெறாதது குறித்து இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரானது அதற்கு பயிற்சி பெறும் விதத்தில் டி20 தொடராக மாற்றியமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்தத் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட குழுவை அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தது. அதில் இந்திய அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவர் இடம் பெறாதது குறித்து விளக்கம் அளித்த தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வீரர்களில் யாருக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கொடுக்க முடியும் என்று கூறுங்கள் என கேள்வி எழுப்பினார். இந்த சூழ்நிலையில் இது குறித்து தனது விமர்சனங்களை இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் தேர்வு என்பது எந்த விதமான யோசனையும் இல்லாமல் தேர்வு செய்யப்படக்கூடிய ஒன்று. இது மிகத்தெளிவாக இருக்க வேண்டும். சமீபத்திய போட்டிகளை பாருங்கள். ஒரு வருடத்திற்கு முந்தைய ஃபார்மை வைத்து ஒரு வீரரை மதிப்பிடுவதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை. அவர் ஐபிஎல் தொடரில் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் 600 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் என்பது மிக முக்கியமான காரணியாகும்.
இதையும் படிங்க:பும்ராவை வைத்து இந்த தப்பை செய்யாதீங்க.. நானா இருந்தா அவரை விளையாட விடவே மாட்டேன் – இந்திய முன்னாள் வீரர்
ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு புத்திசாலித்தனமான வீரர், இருப்பினும் நீங்கள் அவரை ஒதுக்கி விட்டீர்கள. இப்போது அவர் குழப்பமான மன நிலைக்குச் செல்வார். இவ்வளவு சிறப்பாக செயல்பட்ட ஒரு வீரருக்கு, அவர் அணியில் யாருக்கு பதிலாக இருப்பார் கூறுங்கள் என்று கேட்கிறீர்கள். இந்தக் கூற்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை இது முற்றிலும் அர்த்தமற்றது மற்றும் அபத்தமானது. இந்த கருத்துக்கு நான் உடன்படவில்லை” என்று ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.






