அடுத்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி யுஏஇல் துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் பெரிய சரிவை கண்டிருக்கின்ற காரணத்தினால் இளம் அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருப்பதால் பாகிஸ்தான அணியில் மூத்த வீரர்களுக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.
ஸ்டார் வீரர்கள் நீக்கம்
இந்த நிலையில் அக்கிப் ஜாவேத் தலைமையிலான பாகிஸ்தான் தேர்வு குழு அதிரடியாக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரையும் ஆசியக் கோப்பை பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நீக்கி இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதேசமயத்தில் பாபர் அசாம் சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட் 129, முகமது ரிஸ்வான் 125 ஸ்ட்ரைக் ரேட் என மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இதன் காரணமாக மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் அதிரடியாக விளையாடும் இளம் அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இளம் கேப்டன்
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் டி20 அணிக்கு சல்மான் அலி ஆகா கேப்டனாக தொடர்கிறார். மூத்த வீரர்கள் பகார் ஜமான், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, ஷாகின் அப்ரிடி ஆகியோர் அணியில் தொடர்கிறார்கள். மற்றபடி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நசீம் ஷா தேர்வு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கில் மட்டுமல்ல, இந்த இருவரும் கிடையாது.. காரணம் இது தான்
பாகிஸ்தான் ஆசிய கோப்பை அணி :
சல்மான் ஆகா (கே), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (வி.கீ), முகமது நவாஸ், முகமது சல்யூப்சிம், முகமது சல்யூப்சிம், முகமது சவூப்சிம். மிர்சா, ஷாஹீன் அப்ரிடி மற்றும் சுபியான் முகீம்.






