இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக கருதப்படும் முகமது ஷமி கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் விளையாடினார். அதற்குப் பிறகு காயம் அடைந்து தற்போது வரை இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் காயம் குணமாகி ரஞ்சி டிராபில் விளையாடி வரும் முகமது ஷமி குறித்து இந்திய முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர்
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது அதில் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக முகமது ஷமி திகழ்ந்தார். இவரும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் இவர் இல்லாமல் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் காயம் குணமடைந்து ஷமி திரும்பவும் ரஞ்சி டிராபியில் வங்காள அணிக்காக விளையாடி வரும் நிலையில் தனது சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் சவுரவ் கங்குலி ஷமி சையத் முஸ்தாத் அலி டிராபியில் விளையாட விட்டாலும் பரவாயில்லை, அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஷமியை ஆஸ்திரேலியா அனுப்புவேன் – கங்குலி
இதுகுறித்து அவர் கூறும் போது “ஆமாம், நான் ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புகிறேன். அவர் சையது முஸ்தாக் அலி டிராபியை விளையாட வேண்டிய அவசியம் இல்லை. பெர்த் டெஸ்டில் அவர் விளையாடா விட்டாலும் அவரை நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவேன். தற்போது தொடர்ந்து பந்து வீசி வருகிறார், அவர் இந்திய அணியுடன் விமானத்தில் இருக்க வேண்டும். தற்போது விளையாடி வரும் ரஞ்சி தொடரில் என்ன ஸ்கோர் என்று எனக்குத் தெரியாது.
இதையும் படிங்க:விராட் கோலிக்கு இந்த விஷயம் நான் இதுவரை செஞ்சதில்லை.. காரணம் இதுதான் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி
ஆனால் இந்த இன்னிங்ஸில் அவர் 25 முதல் 30 ஓவர்கள் வரை உறுதியாக வீசுவார் என்று நம்புகிறேன். அவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யும் விமானத்தில் இருக்க வேண்டும். அவர் பெர்த் டெஸ்ட் தவற விடலாம், இருந்தாலும் பரவாயில்லை அவர் ஆஸ்திரேலியாவில் விளையாட வேண்டும்” என்று உறுதியாக கூறியிருக்கிறார். கங்குலி குறியது போல ஷமி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டால், பும்ராவுடன் அனுபவிக்க பந்து வீச்சு பார்ட்னர்ஷிப்பை அவரால் வெளிப்படுத்த முடியும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.