இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் குறிப்பாக விராட் கோலி மற்றும் ஸ்டார்க் இடையேயான போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்சல் ஸ்டார்க் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இரண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர்களிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்க உள்ள இந்திய அணி தற்போது மூன்றாவது முறையும் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்களால் அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக இந்திய வீரர் விராட் கோலி எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் பந்து வீசும் போது அது அனல் பறக்கும் போட்டியாகவே காணப்படும். இந்த சூழ்நிலையில் ஐபிஎல்லில் விளையாடிய போது களத்திற்கு வெளியே விராட் கோலி குறித்து அறிந்து கொண்டதாகவும், களத்தில் இருக்கும் போது கிரிக்கெட் குறித்து மட்டுமே அதிகம் பேசியதாகவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விராட் கோலி குறித்து மிட்சல் ஸ்டார்க்
இதுகுறித்து அவர் கூறும்போது “ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் சில வருடங்கள் விளையாட வேண்டி இருந்தது. அதனால் களத்திற்கு வெளியே அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன். எப்போதும் ஒன்றாக அவருடன் போட்டிகளை ரசித்திருக்கிறேன். ஆனால் அது அவருக்கும் எனக்கும் இடையே விரிசல் இருப்பதாக நினைக்கவில்லை.
இதையும் படிங்க:ஓவரா பேசிதான் 2 டக் அடிச்சேன்.. நிறைய தோல்வியை பாத்துட்டேன்.. எனக்கு இது பிடிக்காது – சஞ்சு சாம்சன் பேட்டி
இது விளையாட்டை விளையாடி ரசிக்க வேண்டிய சூழல் பற்றியது. எனவே நான் விராட் கோலி மீது கோபப்படவோ அல்லது நான் கோபப்படுத்த முயன்ற வீரரோ கிடையாது. அது இப்போது வரையுமே தொடர்கிறது. களத்தில் அவருடன் கிரிக்கெட் குறித்தே அதிகம் விவாதித்து இருவரும் பேசி இருக்கிறோம்” என்று ஸ்டார்க் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் போட்டி வருகிற 22 ஆம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது. தற்போது பேட்டிங்கில் பார்ம் இன்றி தவிக்கும் விராட் கோலி இந்த தொடர் மூலமாக மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டிய முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். எனவே விராட் கோலி மீண்டும் பழைய நிலைமைக்கு வருவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.