கோலி விஷயத்தில் கருணை வேண்டாம்.. வெறும் பெயரை வைத்து இனி ஓட்ட முடியாது – கபில்தேவ் கருத்து

0
53

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய சீனியர் வீரர்களின் மோசமான பங்களிப்பாகும்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் கபில் தேவ் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம்

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஓரளவு நன்றாக விளையாடி வரும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்த நிலையில் தொடர்ந்து மோசமான பங்களிப்பை வெளிப்படுத்தியதால் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த விராட் கோலி அதற்குப் பிறகு நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்த காரணத்தால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில் முன்னர் செய்த சாதனைகளை வைத்தே இனி காலத்தை ஓட்ட முடியாது எனவும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது எனவும் இந்திய முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நல்ல பெயரை வைத்து ஓட்ட முடியாது

இது குறித்து கபில் தேவ் கூறும் பொழுது “இந்திய அணியிடம் ஏராளமான வாய்ப்புகள் இருக்கும்போது ஃபார்மில் உள்ள வீரர்களை வைத்து விளையாடுவது முக்கியமாகும். நற்பெயரை மட்டும் வைத்து விளையாட முடியாது எனவே தற்போது என்ன ஃபார்ம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு நிலையான வீரராக இருந்தாலும் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்தால் உங்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்பது நியாயமாகாது. விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை என்றால் இளைஞர்களை தொடர்ந்து வெளியே வைத்திருக்க முடியாது.

இதையும் படிங்க:பேட்டிங் இல்லாம.. இந்த பையன்கிட்ட ஒரு ஸ்பெஷல் டேலண்ட் இருக்கு.. பெரிய ஸ்டாரா வரலாம் – சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

தேர்வுக்கு ஆரோக்கியமான போராட்டம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இளைஞர்கள் விராட் கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால் விராட் கோலி இது குறித்து சிந்திக்க வேண்டும். ‘தான் ஒரு கட்டத்தில் பெரிய வீரராக இருந்தேன், இப்போது அந்த நம்பர் ஒன் இடத்தை அடைய போராட வேண்டும்’. இது அணிக்கு ஒரு பிரச்சினைதானே தவிர மோசமான பிரச்சனையாக இருக்காது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -