இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கடந்த ஜூன் மாதத்தில் வென்ற பிறகு அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிறகு சூரியகுமார் யாதவ் டி20 அணிக்கு கேப்டனாக கொண்டுவரப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறி இருக்கிறார்.
இந்திய டி20 அணியின் கேப்டன்
இந்திய டி20 அணியை பொறுத்தவரை ரோகித் சர்மாவிற்கு பிறகு பெரிதும் கேப்டனாக அடையாளம் காணப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. ரோகித் சர்மா கேப்டனாக இருந்த சமயங்களில் கூட அவர் ஆட முடியாத சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாக தலைமை தாங்கினார். ஏனென்றால் அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியன் கோப்பையை வெல்ல உதவி புரிந்ததோடு அதற்கு அடுத்த சீசனில் இறுதிப்போட்டி வரை தனது அணியை முன்னேற்றினார்.
ஆனால் அவருக்கு அவ்வப்போது காயம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. இதனை கவனித்த இந்திய நிர்வாகம் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமித்தது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளராக விளங்கிய சஞ்சய் பாங்கர் சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமித்தது தனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
டெஸ்ட் கேப்டன்ஷியில் பும்ராவை போல பொருத்தமானவர்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டது எனக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அதுவரை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அந்த மாற்றத்தை சூரியகுமார் யாதவ் கையாண்ட விதம் அவரது சிறந்த மனித மேலாண்மை திறனை காட்டுகிறது. ஜடேஜா, கோலி, ரோஹித் என ஓய்வு பெற்ற பிறகு இளம் இந்திய அணிக்கு பொருத்தமான கேப்டனாக இருந்தார்.
இதையும் படிங்க:87 ரன்.. டூப்ளஸ்சிஸ் அபார ஆட்டம்.. தினேஷ் கார்த்திக் அடிரடி வீண்.. 7 விக்கெட்டில் சூப்பர் கிங்ஸ் வெற்றி.. எஸ்ஏ டி20
இது ஒரு பெரிய பிளஸ் ஆக இருக்கிறது. அவர் இந்த தலைமுறையின் ஒரு சிறந்த வீரராக இருக்க முடியும். சூரியகுமார் யாதவ் ஒரு சிறந்த குணம் கொண்ட மனிதர். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு வலுவான இன்னிங்ஸ்க்கு பிறகு நேர்காணலின்போது எப்போதும் ஒரு புன்னகையாகவே இருப்பதை பார்க்கலாம். அவர் லேசான ஒரு இதயம் கொண்டவர். டெஸ்ட் கேப்டன்ஷியில் பும்ராவை போலவே இந்த டி20 அணியில் ஸ்கை இதுவரை சிறந்த வீரர்” என்று கூறியிருக்கிறார்.






