87 ரன்.. டூப்ளஸ்சிஸ் அபார ஆட்டம்.. தினேஷ் கார்த்திக் அடிரடி வீண்.. 7 விக்கெட்டில் சூப்பர் கிங்ஸ் வெற்றி.. எஸ்ஏ டி20

0
645

தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 26 வது லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய ஜோபர்க் அணி ஏழு விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோபர்க் அணியின் கேப்டன் டூப்ளஸ்சிஸ் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி ராயல்ஸ் அணியில் பேட்டிங் களமிறங்கிய ஷாம் மற்றும் பிரிட்டோரியஸ் ஜோடி 26 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து நடையை கட்டியது. அதற்குப் பிறகு ஹெர்மன் 28 ரன்னில் வெளியேற புரேன் 5 ரன், கீத் 1 ரன்னில் வெளியேறினார்கள். அதற்குப் பின்னர் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக விளையாடினார்.

குறிப்பாக தினேஷ் கார்த்திக் விகான் லுப்பேவின் 12வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் விளாசி தனது அதிரடியை காண்பித்தார். 39 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 53 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிரா மற்றும் சிபாம்லா ஆகியோர் தலா 3 விக்கட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

- Advertisement -

சூப்பர் கிங்ஸ் கேப்டன் அதிரடி ஆட்டம்

தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் மற்றும் கான்வே ஆகியோர் களம் இறங்கினார்கள். கான்வே 20 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் டூப்ளஸ்சிஸ் அதிரடியான ஆட்டத்தை மேற்கொண்டார். ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்து நொறுக்கினார். 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 4 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸ் என 158 ஸ்ட்ரைக் ரைட்டில் 87 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:கம்பீர் நினைப்பது நடக்காது.. கோலி மாதிரி சூப்பர் ஸ்டார் நெனச்சாதான் இது நடக்கும் – ஆர்சிபி முன்னாள் வீரர் பேட்டி

இறுதியாக டுப்லாய் 18 ரன் மற்றும் பேர்ஸ்டோ 8 ரன்னில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதில் சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டு பிளஸ்சிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சூப்பர் கிங்ஸ் அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -