இந்திய அணி அவ்வளவு ஈஸியா ஓரம் கட்டாது.. தன்னை தயார்படுத்த இதுவே அவருக்கு சரியான நேரம் – மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
442

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் இங்கிலாந்து ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடரில் இடம் பெறாத வீரர் குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான முறையில் பந்து வீசி அந்தத் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவர் இந்திய அணியில் இருந்து விலகி உள்ள நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து இடம் பெற்று இருக்கிறார். இருப்பினும் அவர் முழுமையான உடல் தகுதி பெறுவது சந்தேகமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் பந்துவீச்சில் போதிய அளவு சிறப்பாக இல்லாத முகமது சிராஜ் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 20 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த நிலையில் அவரது பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 47.15 ஆக உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் முகமது சிராஜ் தன்னை தயார்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் எனவும், இந்திய அணி அவரை அவ்வளவு சீக்கிரம் ஓரம் கட்டி விடாது எனவும் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஓரம் கட்டி விடாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய கிரிக்கெட் முகமது சிராஜை அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கி விடாது என்பதால், அவர் தனது பேட்டரியை ரீசார்ஜ் செய்ய இதுவே சரியான நேரம் ஆகும். முகமது சமி படிப்படியாக ஒரு நாள் தொடரில் களமிறங்க இதுவே சரியான வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரில் இருந்து நீங்கள் சரியான இடத்தில் இருக்க வேண்டும். 50 ஓவரை பொறுத்தவரை 3 1/2 மணி நேரத்தில் 10 ஓவர்கள் வீசுவது என்பது முழுமையான சவால். எனவே அவர் முழு உடல் தகுதிக்கு திரும்பவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:அவங்க பொருளை எடுத்து அவங்களையே செய்யணும்.. இந்திய அணிக்கு எதிரான திட்டம் இதுதான் – ஜாஸ் பட்லர் பேட்டி

அர்ஸ்தீப் சிங் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இப்போது அவரது தன்னம்பிக்கை மிகவும் நன்றாக உள்ளது. பந்துவீச்சில் நல்ல தரம் உள்ளது அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்து சீம் செய்கிறார். 50 ஓவர் ஃபார்மேட்டில் அவரை அறிமுகப்படுத்த இதுவே சரியான நேரம் ஆகும். எனவே அவரை டி20 வீரர் மட்டுமே என்று நினைத்து ஒதுக்கி விட வேண்டாம். அவரை களம் இறக்குவதற்கு இப்போதுதான் சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -