அவங்க பொருளை எடுத்து அவங்களையே செய்யணும்.. இந்திய அணிக்கு எதிரான திட்டம் இதுதான் – ஜாஸ் பட்லர் பேட்டி

0
866

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து முதல் ஒரு நாள்

ரோகித் சர்மாவை பொருத்தவரை சிவப்பு பந்து கிரிக்கெட் அவருக்கு சரியாக அமையவில்லை என்றாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டனாக திகழ்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இறுதிப்போட்டி வரை வந்தது நினைவு இருக்கலாம். அதேபோல கடந்த டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக இருப்பதற்கு ரோகித் சர்மா மிக முக்கிய காரணம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பாராட்டி இருக்கிறார். கட்டமைப்பை விட்டு வெளியே வந்து ரோஹித் சர்மா தன்னை வெளிப்படுத்திய விதமும் அணி வீரர்களை வழி நடத்திய விதமும் பாராட்டுக்குரியது எனவும் இதே மாதிரியான அணுகு முறையில் தான் தானும் இருக்க விரும்புவதாக சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் மாதிரி இதை செய்யணும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை திரும்பிப் பார்த்தால் இரண்டு அணிகளுமே நேர்மறையாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடின. டிராவிஸ் ஹெட் இறுதிப்போட்டியில் எப்படி விளையாடினார் என்பதை நினைத்துப் பாருங்கள். அதனால் அது வெற்றிகரமாக இருக்கும் என்பதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் ரோகித் சர்மா தன்னை ஒரு கேப்டனாக வெளிப்படுத்தி இந்தியாவை அதே பாணியில் ஆன கிரிக்கெட்டை நோக்கி தள்ளிய விதத்திற்கு நிறைய பாராட்டுக்களை பெறுகிறார்.

இதையும் படிங்க:இந்திய அணியில்.. இந்த சிஎஸ்கே வீரருக்கு ஏன் இடம் தராங்க?.. தேவையே இல்ல – பத்ரிநாத் பேச்சு

நிச்சயமாக நாங்கள் இதேபோன்று இருக்க விரும்புகிறோம். எதிர் அணிக்கு பேட்டிங் மூலம் அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் விரைவாக விக்கட்டுகள் வீழ்த்த வேண்டும் எதிரணியை பேட்டிங் செய்ய அனுமதித்தால் விளைவு எப்படி இருக்கும் என்று அறிவது மிகவும் முக்கியம். எனவே விக்கட்டுகளை கண்டுபிடிப்பதற்கான வழிகளை நாங்கள் தீவிரமாக முயற்சி செய்வோம். இது எப்போதுமே செயல்படுத்தலை பற்றியதாகும். பழமைவாதமோ புதிய முறையோ எது எப்படி இருந்தாலும் வெளியே சென்று அதனை செயல்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -