இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வீரரான விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவு குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஓய்வு பெற முடிவு
இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே இந்தி அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே இந்திய அணி தற்போது ஒரு புதிய கேப்டனை தேடி வரும் நிலையில் விராட் கோலியும் ஓய்வு பெற விரும்புவதாக அறிக்கைகள் வெளியானது.
ஏற்கனவே டி20 ஃபார்மேட்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற நிலையில், டெஸ்ட் பார்மெட்டிலும் ரோஹித் சர்மா உடன் சேர்ந்து விராட் கோலி ஓய்வெடுக்க விரும்பும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிவிட்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் முகமது கைஃப் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதை மட்டும் செய்யணும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்தியாவின் சிறந்த வீரமான விராட் கோலி ஓய்வெடுக்க விரும்புகிறார். அவர் ஓய்வு பெறுவது குறித்து யோசித்து வருகிறார். ஆனால் இங்கிலாந்து சென்று சிறப்பாக விளையாடி தனது கிரிக்கெட் வாழ்க்கையை விராட் கோலி முடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே அதைப் போன்று இந்த முறையும் இங்கிலாந்து சென்று சிறப்பாக விளையாட வேண்டும். அவர் தற்போது உதவியற்ற நிலையில் இருக்கிறாரா? என்கிற எண்ணம் தோன்றுகிறது.
இதையும் படிங்க:கேப்டன் ரோஹித்தை.. இளம் டெஸ்ட் வீரர்கள் இந்த இடத்தில் கண்டிப்பா மிஸ் செய்வார்கள் – சுனில் கவாஸ்கர் பேட்டி
ஏனென்றால் பல ஆண்டுகளாக விராட் கோலியை தொந்தரவு செய்யும் ஒரு பந்துவீச்சாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகள் இருக்கிறது. நான்காவது ஸ்டெம்புக்கு வெளியே பந்து வீசப்பட்ட போது அதற்கு விராட் கோலி பலமுறை அவுட் ஆனார்.
அதிலிருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை. அது இங்கிலாந்து சென்று இதே முறையில் அவுட் ஆனார், அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இதே முறையிலும் மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் சுழலுக்கு ஆட்டம் இழந்தார்” என்று பேசி இருக்கிறார்.