இந்திய கிரிக்கெட்

கவுதம் எல்லா டீமுக்கும் சரியான வீரர்களை கொடுத்து இருக்கேன்.. டிராவிட் மெசேஜ்.. கம்பீர் உணர்ச்சிவசம்

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கவுதம் கம்பீர் இன்று இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை சந்திக்கிறார். இந்த நிலையில் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் ராகுல் டிராவிட் வாழ்த்தோடு நிறுத்தாமல் சில அறிவுரைகளையும் கவுதம் கம்பீருக்கு கூறியிருக்கிறார். கடினமான நேரங்களில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். அத்தோடு எல்லா அணிக்கும் சரியான வீரர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ராகுல் டிராவிட் தன்னுடைய வாழ்த்தில் பேசும் பொழுது “வணக்கம் கவுதம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நமது உலகின் அற்புதமான பணிக்கு உங்களை வரவேற்கிறோம். பார்படாஸ் மற்றும் மும்பையில் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் அமைந்தது. கனவுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்திய அணிகளான எனது பயணங்கள் முடிந்து மூன்று வாரங்கள் ஆகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அணியில் நான் செய்த விஷயங்கள் மற்றும் அங்கிருந்த நட்பை பொக்கிஷமாக வைத்திருப்பேன்.

இந்திய அணிக்கு பொறுப்பேற்று இருக்கும் உங்களுக்கும் நான் இதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு அணியிலும் முழுமையான தகுதி உள்ள வீரர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பயிற்சியாளர்கள் மற்ற எல்லாரையும் விட புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் அனைத்து பக்க பலமாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் களம் சூடாக இருக்கும் பொழுது கொஞ்சம் மூச்சை ஆழமாக இழுத்து விட்டு, அந்த இடத்தில் புன்னகைக்க வேண்டியது வரும். இது ஒரு பயிற்சியாளர் மாதிரி இன்னொரு பயிற்சியாளர் என எல்லோரும் தொடர வேண்டிய ஒன்று. இல்லையென்றால் அது மக்களை அதிர்ச்சி அடைய செய்யும். கவுதம் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் இன்னும் நீங்கள் அணியை உயர்த்திற்கு கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 90 வருட மோசமான சாதனை.. தினேஷ் கார்த்திக்கையும் தாண்டி முறியடித்த ஜிம்பாப்வே வீரர்.. அயர்லாந்து டெஸ்ட்

இந்த செய்தியை கேட்ட கவுதம் கம்பீர் தான் எப்பொழுதும் அதிகம் உணர்ச்சிவசப்படாத ஆள் என்றும், ஆனால் ராகுல் டிராவிட் பேசியிருப்பது மிகவும் அர்த்தம் வாய்ந்த ஒன்று எனவும், இதைக் கேட்ட பொழுது தான் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் நேர்மையுடனும் வெளிப்படையாகவும் இருந்து கடுமையாக உழைத்து அனைவரையும் பெருமைப்படுத்த முயற்சி செய்வேன் எனக்கு கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by