இந்திய கிரிக்கெட்

பும்ரா ஒரு ஜோக்.. வேற என்ன சொல்ல.. நான் இதை செய்ய வேண்டியது இல்லை – ஸ்டீவன் ஃபின் பேட்டி

தற்போது கிரிக்கெட் உலகில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விளையாட முடியாமல் போக, பும்ரா கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தியதோடு, பந்துவீச்சாளராக 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

திரும்பிய ஆஸ்திரேலியா மீடியாக்கள்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முதல் வாரத்தில் இருந்து ஆஸ்திரேலிய மீடியாக்கள் விராட் கோலிக்கு பெரிய அளவில் மரியாதை செலுத்தி வந்தன. மேலும் கவனிக்கப்படும் இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கும் ஆஸ்திரேலிய மீடியாக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதே சமயத்தில் இந்திய அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஆஸ்திரேலியா மீடியாக்கள் முக்கியத்துவம் தரவில்லை. மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கூட பேட்ஸ்மேன்களை குறி வைத்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் மிதவேக பந்துவீச்சு கேப்டன் என்று பத்திரிக்கையாளர் குறிப்பிடவும் செய்தார். அதற்கு பும்ரா தன்னால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடியும் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் முடிவுக்கு பிறகு ஆஸ்திரேலியா மீடியாக்களில் பும்ரா தலைப்புச் செய்தியாக மாறினார்.

- Advertisement -

பும்ரா ஒரு ஜோக்

பும்ரா குறித்து ஸ்டீவன் ஃபின் பேசும்பொழுது “ஜெய்ஸ்வால் அற்புதமான 161 ரன்கள் எடுத்தார். ஆனால் நான் பார்க்க விரும்பியது பும்ராவைதான். தற்போது கிரிக்கெட் உலகில் அவரை விட சிறந்தவர்கள் யாரும் கிடையாது. பும்ராஒரு ஜோக். அவருக்கு இணையாக யாருமே இல்லை. நேர்மையாக அவர் பந்து வீசுவதை பார்க்கும் பொழுது, நான் பேட்டிங் செய்ய தேவை இல்லை” என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி இன்னும் 102 ரன்கள்.. லாரா ரிச்சர்ட்ஸ் மெகா சாதனை காலி.. ஆஸி மண்ணில் நடக்க இருக்கும் மாஸ் சம்பவம்

இந்திய அணிகள் வெற்றி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் கூறும் பொழுது “இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று மிகவும் கடினமான மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது பெர்த் வாக்கா மைதானம் கிடையாது. இருந்தபோதிலும் ஆப்டஸ் புதிய மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்ததில்லை. இந்தியா தைரியமாக இருந்தது என்று நான் கூறுவேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts