ஆஸி தொடரில் விராட் கோலியை தடை செய்திருக்கனும்.. எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு – இங்கிலாந்து ஹார்மிசன் பேச்சு

0
98
Harmison

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக விளையாடுவதற்கு தடை விதித்திருக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிக மோசமாக இருந்தது. ஒரே முறையில் தொடர்ந்து ஆட்டம் இழந்து இந்திய தரப்பை ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார். ஆனால் களத்தில் செயல்படும் விதத்தில் தனது ஆக்ரோஷத்தை அதிகமாக்கினார். இது நிறைய சர்ச்சைகளை உருவாக்கியது.

- Advertisement -

தடையில் தப்பிய விராட் கோலி

விராட் கோலி நான்காவது டெஸ்ட் என்பது ஆஸ்திரேலிய அறிமுக வீரரான 19 வயது சாம் கான்ஸ்டாஸ் தோள்பட்டையில் வேண்டுமென்றே சென்று இடித்தது தெளிவாக தெரிந்தது. இந்தப் பிரச்சினையில் விராட் கோலி 100 சதவீதம் தவறு செய்திருந்தது வீடியோவில் பார்க்கும் பொழுது ஊர்ஜிதம் ஆனது.

இப்படி உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதிப்பது வழக்கமானது. ஆனால் இந்த முறை விராட் கோலிக்கு 20 சதவீதம் சம்பளத்தில் அபராதம் மட்டுமே விதித்து தண்டனை கொடுக்கப்பட்டது. ஐசிசி இந்த விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டதாக இன்னும் கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

விராட் கோலிக்கு தடை விதித்திருக்க வேண்டும்

எதிரணி வீரர்களை களத்தில் ஏதாவது பேசி வம்பு இழுப்பது அவர்களது கவனத்தை திசை திருப்புவது கிரிக்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வருவது. ஆனால் அதற்குமே தனிப்பட்ட சில விஷயங்களை வைத்து பேசக்கூடாது என்பது விதியாக இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது உடல் ரீதியான தாக்குதலை நடத்திய விராட் கோலியை தண்டிக்காதது தவறான முன்னோதாரணமாக போய்விடும் என பல முன்னாள் வீரர்கள் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க : இலங்கை டெஸ்ட்.. ஆஸி அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. 2 ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு.. சுழல் கூட்டணி

இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறும் பொழுது “அந்த குறிப்பிட்ட பிரச்சினையில் விராட் கோலி என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவர் நேரடியாக களத்தில் இறங்கி அதை செய்தார். இந்த சம்பவத்தில் விராட் கோலி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்க வேண்டும். நான் விராட் கோலியை எவ்வளவு நேசிக்கிறேன், அவர் இந்த விளையாட்டிற்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் எதற்கும் ஒரு கோடு இருக்கிறது. அதை கடக்க கூடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -