இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கதான் விரும்புவாரு.. ஆனா இப்போ அவர நெனச்சாதான் கவலையே – இங்கி நாசர் ஹுசைன் பேட்டி

0
495

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து அதன் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது அதே முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் மூன்று நாட்கள் ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 261 ரன்கள் தேவைப்படுகிறது.

கைவசம் இன்னும் எட்டு விக்கெட்டுகள் இங்கிலாந்து வசம் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் இதே பாணியில் ஆன ஆட்டத்தை விரும்புவதாகவும் காயத்திற்கு பிறகு நீண்ட காலம் கழித்து மீண்டும் டெஸ்ட் தொடருக்கு திரும்பி இருப்பதால் அவரது பேட்டிங் பார்ம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் சில முக்கிய கருத்துக்களை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் விரிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியில் உள்ள பிரச்சனை

இது குறித்து அவர் கூறும் போது “இந்த தருணம் சிறப்பாக இருக்கிறது. கிரிக்கெட்டில் இது மிகவும் அற்புதமான நாள் கடந்த இரண்டு நாட்கள் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இது பந்து மற்றும் பேட்டுக்கு இடையேயான சமச்சீர் அற்ற போட்டி கிடையாது. பாகிஸ்தான் அணியில் சல்மான் ஆகா மிடில் வரிசையில் இறங்கி குவித்த ரன்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளன. இங்கிலாந்து அணியில் ரூட் ஒரு முக்கிய விக்கெட்டாக திகழ்கிறார்.

இதையும் படிங்க:நியூசி டெஸ்ட்.. இந்தியா தோக்காம இருக்க.. அவங்க 3 பேர சமாளிச்சு இத செஞ்சாலே போதும் – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

இப்போது எனக்கு இருக்கும் ஒரே கவலை ஸ்டோக்ஸ் மட்டுமே ஆகும். காயத்தில் இருந்து திரும்பி இருப்பதால் அவர் தற்போது பேட்ங்கில் ஃபார்ம் இன்றி இருக்கிறார். இவ்வளவு காலமாக அவர் பேட்டிங் செய்யாமல் இருப்பது தான் தற்போது இருக்கும் பிரச்சனை. ஆனால் தற்போது இருக்கும் நிலை அவருக்காக என்றே உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற சூழ்நிலைகளிலேயே அவர் பேட்டிங் செய்ய மிகவும் விரும்புவார்” என்று கூறியிருக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் தற்போது வெற்றி பெறுவதற்கு 261 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -