ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் குறித்து இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நவீன கால சிறந்த டெஸ்ட் வீரர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரராக இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பித் பும்ராவை தேர்வு செய்தது. ஏனென்றால் கடந்த ஆண்டு அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது பந்து வீச்சில் சிறப்பான சாதனையையும் படைத்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் மற்றொரு வீரரான விராட் கோலி சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல பார்ம் இல்லாவிட்டாலும் இந்திய அணி கண்டெடுத்த அற்புதமான டெஸ்ட் வீரர்களில் விராட் கோலியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை நவீன கால டெஸ்ட் வீரராக தேர்வு செய்து அதற்கான காரணத்தை விளக்கி கூறுகிறார்.
மைக்கேல் வாகன் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஸ்மித்தான் நவீன கால டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர் என்று நான் வாதிடுவேன். அவர்தான் சிறந்த பிரச்சனைகளை தீர்ப்பவர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு தனது பேட்டிங்கில் ஒரு வித்தியாசமான நுட்பம் இருக்கிறது. அதனால் அவருக்கு பந்துவீச்சாளர்களின் கைகளில் இருந்து பந்தை துல்லியமாக கணித்து அவர்களது வேகத்தை எடுக்க முடிகிறது. மைதானத்தை படித்து ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை அவரால் துல்லியமாக கண்டறிய முடிகிறது.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. விராட் கோலிய நான் அவுட் செஞ்சப்போ.. எனக்கு இதுதான் தோனுச்சு – பாக் முகமது அமீர்
அவரது எண்ணிக்கையை பார்த்தால் டான் பிராட்மேன் போன்று பேசப்படுவதற்கு ஒரு சில வீரர்களே இருக்கிறார்கள். டான்
பிராட் மேன் சம்பந்தப்பட்ட ஒரு உரையாடலில் நீங்கள் இருக்கும் போது நல்லவர் போல தோற்றம் அளிப்பீர்கள்” என்று கூறி இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வரும் ஸ்மித் 188 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 104 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி, பும்ரா என்று சர்வதேச சிறந்த வீரர்கள் இருக்கும்போது மைக்கேல் வாகன் ஸ்மித்தை தேர்வு செய்திருக்கிறார்.






