இந்திய கிரிக்கெட்

விராட் ரோஹித்தை நினைச்சா.. நம்பிக்கையாவும் பயமாவும் இருக்கு.. அதுக்கு காரணமே இந்த விஷயம் தான் – மைக்கேல் வாகன் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி மிகவும் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் தொடரான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வருகிற நவம்பர் 22ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக வெற்றி பெற்ற நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து மண்ணை கவ்வியது. மேலும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இனி வருகிற 5 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

இதில் இந்திய முன்னணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ரன்கள் குவிக்க வேண்டிய இடத்தில் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறுவது இந்திய அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார்கள் எனவும், அதே நேரத்தில் சிறப்பாக விளையாட மாட்டார்கள் என அஞ்சுவதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ரோஹித் சர்மா குறித்து பயமாக உள்ளது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி பெறுவதற்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பெரிய ரன்கள் குவித்து சிறந்த நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றும் பயப்படுகிறேன்.

இதையும் படிங்க:2024 ஐபிஎல் மெகா ஏலம்.. 2 கோடி அடிப்படை விலையில்.. 23 இந்திய வீரர்கள்.. விறுவிறுப்பாகும் களம்

அவர்கள் தற்போது விளையாட்டின் இறுதியில் இருக்கிறார்கள் என்று அஞ்சுகிறேன். நீங்கள் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் போது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதுடன் மிக திடமான பேட்டிங் நுட்பத்தையும், அற்புதமான மனநிலையோடு வந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்று கூறி இருக்கிறார். தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 35 வயதை கடந்திருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாட விட்டால் இதுவே அவர்களுக்கு கடைசி தொடராக அமையும் என்று மைக்கேல் வாகன் அஞ்சுகிறார்

- Advertisement -
Published by