தோனி கிடையாது.. விராட் கோலிதான் சிறந்த ஃபினிஷர்.. காரணம் இதுதான்.. ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து

0
72
Anderson

உலகக் கிரிக்கெட்டில் வெள்ளைப் பந்து வடிவத்தில் மிகச்சிறந்த பினிஷர் ஆக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னொரு இந்திய வீரரை மிகச் சிறந்த பினிஷர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் கீழ் வரிசையில் வந்து விளையாடிய போதும். ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் சேர்த்து, அத்தோடு ரன் ஆவரேஜ் 50 க்கு மேல் வைத்திருக்கும் வீரராக ஓய்வு பெற்றார். அவருடைய இந்த புள்ளி விபரங்கள் இந்திய அணி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது.

- Advertisement -

தோனியின் தளபதி

இந்த நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றிருக்கும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தோனியின் தளபதியாக களத்தில் ஆரம்பத்தில் வளர்ந்து வந்த விராட் கோலியை மிகச் சிறந்த பினிஷர் என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

மேலும் அவர் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்பொழுது ரன்களை துரத்துவதில் எவ்வளவு சதங்கள் மற்றும் எத்தனை ரன்கள் அடித்திருக்கிறார் என்பது அவர் எவ்வளவு பெரிய ஃபினிஷர் என்பதற்கான சாட்சி என்றும் கூறியிருக்கிறார். எனக்கு ஆரம்பத்தில் அவரை சுலபமாக வீழ்த்த முடிந்தது போல் தெரிந்தாலும் பிறகு அவர் வீழ்த்த முடியாத அளவிற்கு சிறந்த பேட்ஸ்மேனாக மாறினார் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிறந்த பினிஷர் விராட் கோலி

விராட் கோலி ரன் துரத்தும் போது செய்திருக்கும் சாதனைகள் தனித்துவமானது. சர்வதேச கிரிக்கெட்டில் ரன் துரத்தலில் இப்படி ஒரு பேட்டரி யாராவது செயல்பட்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. குறிப்பாக 50 ஓவர் வடிவத்தில் ரன்களை துரத்தும் பொழுது அவர் எடுத்திருக்கும் சதங்கள் மற்றும் ரன்கள் ஆச்சரியமானவை.

இதையும் படிங்க : இந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம்.. எங்கு எந்த மாதத்தில் நடக்கும்? – வெளியான புதிய தகவல்கள்

கிரிக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் மேலும் கீழுமாக இருக்கிறீர்கள். சில தொடர்கள் உங்களுக்கு நன்றாக அமையும் சில தொடர்கள் உங்களுக்கு நன்றாக அமையாது. ஆனால் விராட் கோலிக்கு அதிகப்படியாக சீராக எல்லாமே அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவர் விளையாடும் பொழுது ஒவ்வொரு பந்திலும் அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியும் என்று நினைத்தேன். ஆனால் சமீபத்தில் அவர் அவுட் செய்ய முடியாத அளவுக்கு வீரராக மாறி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -