ஒல்லியா காட்ட முயற்சி பண்ணாதீங்க.. அதனால பாதிக்கப்பட்டவங்கள தெரியும் சொல்ல மாட்டேன் – அமித் மிஸ்ரா பேச்சு

0
64
Rohit

இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா ஒருவர் தான் பார்ப்பதற்கு ஒல்லியாக தெரிய வேண்டும் என பிட்டாக இருப்பதற்கான முயற்சிகளை செய்யக்கூடாது என கூறியிருக்கிறார்.

மேலும் குறைந்த காலத்தில் உடல் எடையைக் குறைத்தவர்களை தனக்குத் தெரியும் எனவும், அவர்கள் குறித்து தான் எதுவும் கூற மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் மறைமுகமாக ரோகித் சர்மாவை விமர்சனம் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஃபிட்டாக காட்டிக்கொள்ள நினைக்காதீர்கள்

இதுகுறித்து அமித் மிஸ்ரா கூறும்பொழுது “ஒவ்வொருவரின் உடலமைப்பில் வேறுபாடு நிறைய இருக்கிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி உடல் அமைப்பு இருக்கிறது. பொதுவாக நாம் ஃபிட்டாக இருக்கிறோமா என்பதை நாம் ஒல்லியாக இருக்கிறோமா என்பதை வைத்து தான் முடிவு செய்கிறார்கள். ஆனால் ஒருவரின் உடல் தகுதியை அப்படி முடிவு செய்யக்கூடாது”

“உங்களுடைய உண்மையான உடலை ஏற்றுக் கொண்டு அதை சரியாக பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல உணவு சாப்பிடுங்கள் சரியான நேரத்திற்கு தூங்குங்கள் நீங்கள் எப்பொழுதும் நன்றாகவே இருப்பீர்கள். மேலும் உங்கள் உணவு கட்டுப்பாட்டை விட்டு விடாதீர்கள்”

- Advertisement -

பாதிக்கப்பட்டவர்களை தெரியும்

” உடல் எடையை அதிகப்படியாக குறைத்து தன்னை ஃபிட்டாக காட்டிக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது. குறைந்த காலத்தில் இப்படி தங்களை ஃபிட்டாக காட்டிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் ஆரோக்கிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனவே இப்படி செய்யக்கூடாது”

இதையும் படிங்க : கோலி ரோகித்துக்கு ஒரு நியாயம்.. கில்லுக்கு மட்டும் சலுகையா.. பிசிசிஐ என்ன முடிவு செய்யும்? – வெளியான செய்திகள்

” ரோகித் சர்மா எப்பொழுதும் உடல் தகுதியுடன் இல்லை என நான் நினைத்ததே கிடையாது. அவர் உடல் எடையால் பாதிக்கப்பட்டவர் என்று நான் உணர்ந்ததே கிடையாது. அவர் பேட்டி மட்டும் கிடையாது பந்துவீச்சும் செய்யக்கூடியவர். களத்தில் எப்பொழுதும் அவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கியவர். அவர் உடல்தகுதி உடன்தான் இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -