இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி நாளை மதியம் நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் இதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இந்திய அணியை வம்பு இழுக்கும் விதமாக மீண்டும் தனது விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சர்ச்சைகளில் இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்து அந்த போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் இந்திய அணி லீக் சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகள் மற்றும் அரை இறுதி ஆட்டம் என நான்கு போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு அதிக நன்மைகள் இருக்கிறது என விமர்சனங்கள் வெளிவந்தது.
பாகிஸ்தானில் விளையாடும் மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் போட்டிகளில் விளையாடும் போது இந்திய அணி மட்டும் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடியது பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. எனவே இந்திய அணிக்கு இது ஒரு சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்றதாகும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.
மீண்டும் வம்பிழுக்கும் மைக்கேல் வாகன்
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எங்களுக்கு இது புதிய மைதானம் கிடையாது நாங்களும் இப்போதுதான் போட்டிகளை விளையாடி வருகிறோம் என்று அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கோச் கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங் கோச் ஆகியோர் இது போன்ற விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் நாளை இதே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:2023 WC பைனலில் அந்த பெரிய தப்ப பண்ணிட்டேன்.. நாளைக்கு வேற மாதிரி வருவேன் – சுப்மன் கில் பேட்டி
இந்த சூழ்நிலையில் ரசிகர்களோடு உரையாடிய மைக்கேல் வாகன் நாளை நடைபெற உள்ள போட்டி குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு “இந்தியா தனது புதிய சொந்த மைதானத்தில் வெற்றி பெறும்” என்று பதில் அளித்திருந்தார். சொந்த மைதானம் குறித்த விமர்சனங்களுக்கு ஏற்கனவே இந்திய வீரர்கள் பதிலளித்த நிலையில், தற்போது மைக்கேல் வாகன் அதனை வம்பு இழுக்கும் விதமாக மீண்டும் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.






