இந்தியாவின் புகழ்பெற்ற உள்நாட்டு டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியாக இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதி விளையாடி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் இந்தியாவில் துலீப் டிராபி விளையாடிய அனுபவம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்தியாவின் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கில் தலைமையிலான இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்து 72.4 ஓவர்களில் 231 ரன்கள் குவித்து இருக்கிறது. அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய இந்தியா பி அணி முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்தியா பி அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குறித்து விளையாடி வருகிறது.
முதலில் துலீப் டிராபியில் வெளிநாட்டு அணிகள் கூட இந்த தொடரின் ஒரு பகுதியாக இருந்தன. தற்போது இங்கிலாந்து லயன்ஸ் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து ஏ அணியில் 2004-2005ம் ஆண்டு நட்சத்திர வீரரான கெவின் பீட்டர்சன் இந்த தொடரில் விளையாடியிருக்கிறார். தற்போது இத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சமூக வலைதளத்தில் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து கெவின் பீட்டர்சன் கூறும் போது “இந்தியா 2004. துலீப் டிராபியில் விளையாடிய அனுபவம். இந்த தொடரில் விளையாடிய போது நான் முதன் முதலில் காதலித்தது இந்தியாவை அல்லது இந்திய பந்துவீச்சாளர்களையா என்று சொல்ல வேண்டுமா? என்று சமூக வலைதளத்தில் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். அப்போது சிறந்த வீரராக திகழ்ந்த பீட்டர்சன் இந்த தொடரில் விளையாடி 86.25 பேட்டிங் சராசரியில் 385 ரன்கள் குவித்தார்.
மேலும் நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இரண்டு அரை சதம் மற்றும் ஒரு சதம் என சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால் இங்கிலாந்து ஏ அணி பீட்டர்சன் சிறப்பாக விளையாடிய போதிலும் வெற்றி பெற முடியாமல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது சடகோபன் ரமேஷ் தலைமையிலான தென்மண்டல அணி இங்கிலாந்து ஏ அணியை வீழ்த்தியது.
இதையும் படிங்க:நான் அந்த இந்திய வீரரை ஸார்னு கூப்பிடுவேன்.. ஏன்னா உலகத்திலேயே அவர் நேர்மையானவர் – பாக் சயித் அஜ்மல் பேட்டி
தேவங் காந்தி தலைமையிலான கிழக்கு மண்டல அணி இங்கிலாந்து அணியை இரண்டாவது போட்டியிலும் வீழ்த்தி வெற்றி பெற்றது. அப்போதைய தொடரில் கவுதம் கம்பீர், ஆகாஷ் சோப்ரா, யுவராஜ் சிங், மிதுன் மன்ஹாஸ், அஜய் ரத்ரா, ஜோகிந்தர் சர்மா, சரந்தீப் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, அமித் பண்டாரி, மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.