இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடக்க வீரர் மெக்ஸ்வீனியை நீக்கம் செய்து அவருக்கு பதிலாக பயிற்சி போட்டியில் விளையாடிய சாம் கான்ஸ்டாஸை அடுத்த இரண்டு போட்டிகளுக்கு சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. அவர் பும்ராவின் பந்துவீச்சுக்கு எதிராக தொடர்ந்து ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மெக்ஸ்வீனி அவருக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் இருப்பினும் அவர் சிறந்த நிலையில் மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்குள் வருவார் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நான் அவருக்காக வருத்தம் அடைகிறேன்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் மெக்ஸ்வீனியை பார்க்கிறேன். அவர் தனது வாழ்க்கையில் கடினமான தொடக்கத்தை பெற்றிருப்பதாக நான் நினைக்கவில்லை. அந்த குழந்தைக்காக நான் வருத்தப்படுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் இருப்பதால் யாருக்கும் கடினமான சவால் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பும்ராவை அவர் இப்போது எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். பும்ராவின் பந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லைட் வெளிச்சத்திற்கு கீழேயும், மற்றும் பெர்த்தில் அவரது பந்து எல்லா நிலையிலும் நகர்ந்தது.
இதையும் படிங்க:துருவ் ஜுரல் எதிர்காலத்திற்காக.. ஐபிஎல் தொடரில் இந்த தியாகத்தை செய்ய போறேன் – சஞ்சு சாம்சன் தகவல்
அடுத்த டெஸ்ட் போட்டியில் அவரை மீண்டும் அழைத்து செல்வார்கள் என்று நினைத்தேன். அடுத்த போட்டியில் அவர் தோல்வியுற்றால் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் சாமை அழைத்து வருவார்கள். நீண்ட காலத்திற்கு இது மோசமான விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஏன் இந்த முடிவை எடுத்தது என்று புரிந்து கொள்ள முடிகிறது. எனவே மெக்ஸ்வீனி மீண்டும் ஆஸ்திரேலியா அணைக்குள் சிறப்பாக நுழைவார் என்று நம்புகிறேன் எனக் கூறியிருக்கிறார்.






