ஐபிஎல்

ருதுராஜ் இதுல சிறப்பா இல்லனா.. தயவு செஞ்சு அவர்கிட்ட இருந்து கேப்டன் பதவியை வாங்குவது நல்லது – சுப்பிரமணியம் பத்ரிநாத்

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகள் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தொடர் தோல்விகளின் காரணமாக சிஎஸ்கே கேப்டன் நீக்கப்படுவாரா? என்பது குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் ஜெய்க்வாட் பேட்டிங்கில் ஆறு போட்டிகளில் இதுவரை பெரிய அளவில் எதுவும் விளையாடவில்லை. மேலும் கேப்டன்சி அழுத்தமும் அவரது முகத்தில் நன்றாக தெரிகிறது. கேப்டனாக செயல்பட்ட ஆறு போட்டிகளில் 2 போட்டிகள் மட்டுமே அவரது தலைமையில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது நான்கில் தோல்வி அடைந்த புள்ளி பட்டியலில் தற்போது 7வது இடத்தில் இருக்கிறது.

அடுத்தடுத்து வரும் போட்டிகளிலும் இதே நிலை நீடிக்கும் ஆனால் சிஎஸ்கே தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போகும். இந்த சூழ்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், சிஎஸ்கே கேப்டனை மாற்ற வேண்டுமா? என்பது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சிஎஸ்கே நிர்வாகம் அவரை கேப்டன் பதவியில் இருந்து விடுவித்து சஞ்சு சாம்சனை கேப்டனாக மிக முக்கியமான என்பது குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் கேப்டனாக படுமோசமாக தோல்வி அடைகிறார் என்பதனால் மட்டுமல்ல. கேப்டன் பொறுப்பின் சுமை அவரது பேட்டிங்கில் மிக நன்றாக தெரிகிறது. அவர் மிக அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை அவரது முகத்திலேயே காணலாம்.

அழுத்தத்தில் இருக்கிறார் என்பதற்காக கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்பது கிடையாது. அவர் தனது பேட்டிங்கில் சிறப்பாக விளையாட துவங்க வேண்டும். ஆறு போட்டிகளில் தோல்வி அடைகிறார் என்பது மிக அதிகம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவரது கேப்டன்ஷிப் நன்றாகவே இருந்தது. ஆனால் ரன் சேஸ்களில் அவர் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by