நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சென்னை அணி தொடர் தோல்வி
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19. 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மூன்றாவது வரிசை வீரர் சாம் கரன் 47 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
இரண்டாவது பாதியில் ஆடுகளம் சுழற்சிக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தது. ரவிந்திர ஜடேஜா மற்றும் நூர் அகமதுவுக்கு இணையாக மூன்றாவது சுழற் பந்துவீச்சாளர் இல்லாத காரணத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி இறுதியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ரவிச்சந்திரன் அஸ்வினை கடந்த போட்டியில் சேர்க்காதது குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
சும்மா உட்கார வைப்பது ஏன்?
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும்போது ” முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடுகளத்துக்கு தகுந்தவாறு அணியை தேர்வு செய்யவில்லை. நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒன்றாக விளையாடியிருந்தால் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும். அஸ்வினை பெஞ்சில் உட்கார வைக்க நீங்கள் 10 கோடி ரூபாய் கொடுக்கவில்லை. அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேறு யாருடனாவது அவர் சண்டையிட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று ஹர்பஜன் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:வைபவ் சூரியவன்சி சச்சினை விட சிறந்தவர்.. ஏன்னா பின்னணியில் இந்த காரணம் இருக்கு – நாசர் ஹுசைன் பேட்டி
ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில போட்டிகளாகவே பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் பென்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சேப்பாக்கம் மைதானங்களில் விளையாடிய போதிலும் அவருடைய பங்களிப்பு சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் இருந்ததில்லை. மேலும் அணியின் காம்பினேஷன் இதுவரை சரியாக அமையாத காரணத்தால் எம் எஸ் தோனி அவரை உட்கார வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






