சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடியவரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நடுத்தர வேகப்பந்துவீச்சாளர் அங்கீத் ராஜ்புத் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்து தனக்கு வாய்ப்பு வழங்கிய அனைத்து அணிகளுக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய உள்நாட்டு வேகப்பந்துவீச்சாளரான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அங்கீத் ராஜ்புத் 2013 மற்றும் 14ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சையது முஸ்தாக் அலி டிராபி தொடரில் உத்தர பிரதேச அணிக்காக விளையாடி 14 விக்கெட்கள் வீழ்த்தி இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
இவர் ஐபிஎல் தொடரில் மொத்தமாக சென்னை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்பூத் உள்நாட்டு கிரிக்கெட்டில் 80 முதல்தரப் போட்டிகளிலும், 50 லிஸ்ட் ஏ மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 248, 71 மற்றும் 105 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இடத்தில் கொல்கத்தா அணி இவரை 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்ததுக்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜ்புத் தனது சமூக வலைதளத்தில் “இன்று நான் மிகுந்த நன்றி உணர்வு மற்றும் பணிவுடன் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். 2009 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான காலகட்டம். இந்திய கட்டுப்பாட்டு வாரியம், உத்தர பிரதேச கிரிக்கெட் வாரியம், கான்பூர் கிரிக்கெட் சங்கம் எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி உள்ளவராக இருக்கிறேன்.
இதையும் படிங்க:பிரிஸ்பேன் டெஸ்ட்.. இந்திய அணியை காப்பாற்றுவாரா வருண பகவான்?. வெளிவந்துள்ள வானிலை அறிக்கை.. முழு விவரம்
ராஜ்புத் கடைசியாக அக்டோபர் மாதம் ஹரியானா அணிக்கு எதிராக ரஞ்சி டிராபியில் விளையாடி இருக்கிறார். 2012- 13 ஆம் ஆண்டில் கர்நாடகா அணிக்கு எதிராக முதல் தரப் போட்டியில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் தனது அணிக்காக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே இவரை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.