யார் என்ன வேணா சொல்லுங்க.. தோனி களம் இறங்கினா கவலையே இல்லாம நான் இதை செய்வேன் – அம்பாதி ராயுடு பேட்டி

0
100

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அந்த போட்டியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற எம்எஸ் தோனி குறித்து மிகைப்படுத்தி பேசியதற்காக அம்பாதி ராயுடுவை ரசிகர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கான தக்க பதிலை கூறி இருக்கிறார்.

- Advertisement -

தோனி குறித்து அம்பாதி ராயுடு

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயத்த 219 ரன்கள் இலக்கை சிஎஸ்கே துரத்தியபோது இறுதிக்கட்டத்தில் எம்எஸ் தோனி 5வது வீரராக களம் இறங்கினார். அப்போது வர்ணனையாளர் குழுவில் இருந்த சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தோனி களமிறங்கும் போது ‘தோனி வாள் ஏந்துவது போல தெரிகிறது, அந்த வாள் இன்று கண்டிப்பாக வேலை செய்யும்’ என்று கூறினார்.

இறுதியில் தோணி 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேற, சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் ஒரு சில ரசிகர்கள் அம்பாதி ராயுடுவின் இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றி வந்தனர். மேலும் அவரது கருத்து மிகைப்படுத்தப்பட்டு இருப்பதாக விமர்சனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து அம்பாதி ராயுடு தற்போது தனது பதிலை கூறியிருக்கிறார்.

- Advertisement -

யார் என்ன வேணா சொல்லுங்க

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” நான் தல(தோனி) ரசிகனாக இருந்தேன், இனி எப்போதும் தல ரசிகனாகவே இருப்பேன். யார் இது குறித்து என்ன நினைத்தாலும் செய்தாலும் பரவாயில்லை. எனது கருத்தில் ஒரு சதவீத வித்தியாசத்தை கூட இது ஏற்படுத்தாது. எனவே பிஆர் களில் பணம் செலவிடுவதை விடுத்து அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள்” என்று அம்பாதிராய்டு கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:என்னங்க ஐபிஎல் விதி இது.. இந்த மாதிரி ஒரு விஷயத்தை நான் எந்த விளையாட்டிலும் பார்க்கல.. லக்னோ கோச் விரக்தி

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அம்பாதி ராயுடு அதற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து பல போட்டிகளை சிஎஸ்கேவுக்காக வென்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக விளையாடிய 2023 ஆம் ஆண்டு சென்னை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்ற நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் ராயுடு அறிவித்தார். தற்போது அவர் வர்ணனையாளர் குழுவில் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -