வாய்ப்புக் கிடைக்காமல் வேறொரு அணியில் நெட் பவுலராக செயல்படும் முன்னாள் சென்னை பந்துவீச்சாளர் – வருத்தத்தில் ரசிகர்கள்

0
109
Mohit Sharma

இந்திய வேகப்பந்து வீச்சாளரான மோஹித் ஷர்மா இந்திய அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் விளையாடினார். 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் மொத்தமாக சென்னை அணிக்கு 57 விக்கெட்டுகளை கைபற்றி இருந்தார். குறிப்பாக 2014ஆம் ஆண்டு 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த அந்த ஆண்டு ஐபில் பர்பில் நிற தொப்பியை கைப்பற்றினார்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக 2014 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி 20 உலகக் கோப்பை தொடர் மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாகவே விளையாடினார்.

- Advertisement -

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மோஹித் ஷர்மா

ஐபிஎல் தொடரில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்கு தடைசெய்யப்பட்டது. இதனையடுத்து 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் பஞ்சாப் அணியில் மோஹித் விளையாடி வந்தார். சென்னை அணியில் விளையாடியது போல் அவரால் அங்கு ஜொலிக்க முடியவில்லை. பின்னர் 2019ஆம் ஆண்டு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பினார்.

2019ஆம் ஆண்டு சென்னை அணிக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றி 27 ரன்கள் கொடுத்தார். அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய அவர் அந்த ஆண்டு ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்பொழுது வரை அவர் ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்காதது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குஜராத் அணியில் நெட் பவுலராக மோஹித் ஷர்மா

சமூக வலைத்தளத்தில் மோஹித் ஷர்மா பரிந்தர் சரண் மற்றும் குர்க்கிரீட் சிங் மான் உடன் ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அப்போது அவர் குஜராத் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டிருந்தார்.

இது சம்பந்தமாக விசாரித்து பார்க்கையில் அவர் தற்போது குஜராத் அணியில் நெட் பவுலராக விளையாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் அணியில் மோஹித் ஷர்மா உடன் பரிந்தர் சரண் மற்றும் லுக்மென் மெரிவாலா ஆகியோரும் நெட் பவுலராக விளையாடி வருகின்றனர்.

ஒரு சமயத்தில் இந்திய அணிக்கும் சென்னை அணியில் மகேந்திர சிங் தோனியின் ஆஸ்தான பந்துவீச்சாளராக வலம் வந்து கொண்டிருந்த மோஹித் தற்பொழுது அணியில் இடம் இல்லாமல் நெட் பவுலராக விளையாடி வரும் செய்தி ரசிகர்கள் அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், “காலம் மிகவும் சக்தி வாய்ந்தது” என்பது போல பல வருத்தமான பதிவுகளை பதிவேற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.