ஒரு பவுலரா எனக்கு.. கோச் மோர்கல் இதுல ரொம்ப பெஸ்ட்.. அதனால நான் இப்படித்தான் பந்து வீசுவேன் – ஆகாஷ் தீப் பேட்டி

0
247

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதற்காக தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளராக தயாராகி வரும் ஆகாஷ் தீப் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கல் குறித்தும், இந்திய ஆடுகளங்கள் குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

புதிய நட்சத்திரம் ஆகாஷ் தீப்

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி பெறுவதற்கு மிக தீவிரமான முறையில் தயாராகி வருகிறது. தற்போது இந்திய அணியில் பலமான பகுதியாக கருதப்படும் வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறி இருக்கும் நிலையில் அவரது இடத்தை நிரப்ப இளம் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் சிறப்பான முறையில் பதிவு செய்து வருகிறார்.

கடந்த டெஸ்ட் தொடர்களில் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகாஷ் தீப் இந்திய ஆடுகளங்கள் எவ்வளவு உதவியாக இருக்கிறது என்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கல் வீரர்களுக்கு உதவும் விதம் குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

எனது பந்து வீச்சில் இருக்கும் பலம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை அவர் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக நாம் என்ன நினைக்கிறோம் நமது செயல்பாடுகள் என்ன என்று நமது ஆன்மாவை அவர் நன்றாக புரிந்து கொள்கிறார். எனவே அவர் கூறும் கருத்துக்களையும் நமக்கு தகுந்தவாறு எளிதாக தொடர்பு படுத்திக் கொண்டு பார்க்க முடியும்.

இதையும் படிங்க:நாங்க யாருக்கும் பயப்பட மாட்டோம்.. ஆஸியை பத்தி ஏன் யோசிக்கணும்?.. எங்க ஸ்டைல் வேற – கம்பீர் விளக்கம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவாக நடைபெற உள்ளது. நான் பந்த வீசும் போது எதிர் அணியோ அல்லது வீரரையோ எது குறித்தும் நான் கவனம் கொள்ள மாட்டேன். அது பொதுவாக அழுத்தத்தை அதிகரிப்பதாக அமையும். நான் எனது பலத்தை உணர்ந்து சரியான இடத்தில் பந்து வீசவே விரும்புகிறேன். அது பேட்ஸ்மேன், பவுலர் அல்லது ஒரு டெய்லென்டர் என யாராக இருந்தாலும் சரி. இந்திய சூழ்நிலைகளில் புதிய பந்தில் பந்துவீச்சாளர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே அப்போது நான் சரியான இடத்தில் பந்து வீச விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -