கடைசி 3 போட்டியில் 2 சதம்.. ரோகித்துக்காக அவரை ஓரம் கட்ட முடியாது.. 2027 WCக்கு அவர் தேவை – இந்திய முன்னாள் வீரர்

0
3

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தேர்வில் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையேயான விவாதம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக 2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, யஷஸ்விக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.


இந்த நிலையில், ரோஹித் சர்மா இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதையும், கடைசி போட்டியில் சதம் அடித்திருப்பதையும் முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரத்தில், யஷஸ்வியும் கடைசி மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து சிறப்பான ஃபார்மில் இருப்பதால், இருவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் சுழற்சி முறையை இந்திய அணி கையாள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து இந்திய முன்னால் வீரர் தீப் தாஸ் குப்தா கூறும் போது
“ரோஹித் விளையாடி, நல்ல ஃபார்மில் இருந்து ரன்கள் அடிக்கும்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதே சமயம் யஷஸ்வியையும் அணிக்குள் கொண்டு வந்து, 2027 உலகக் கோப்பைக்கு முன்பு போதுமான போட்டி அனுபவம் பெறச் செய்ய வேண்டும். தற்போது அவர் இருக்கும் ஃபார்மை பார்க்கும்போது, மற்றொரு தொடக்க வீரராக தயார்படுத்த சிறந்த தேர்வு யஷஸ்விதான்” என்று தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

- Advertisement -