இந்திய அணியை சமாளிச்சுருவோம்.. ஆனா மற்ற அணிகளை பார்த்தா இதுல பயமா இருக்கு – பாக் பசித் அலி பேட்டி

0
654

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு விளையாட உள்ள அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் மட்டும் இன்னும் தனது அணியை அறிவிக்காமல் இருக்கிறது.

பாகிஸ்தான் அணியில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்னும் வெளியிடப்படாத பாகிஸ்தான் பட்டியல்

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள 8 சர்வதேச நாடுகளும் தங்களது 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் கடைசியாக இந்திய அணி தங்களது பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி இன்னும் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

கடந்த சில வருடங்களாகவே தோல்வி பாதையில் இருந்த பாகிஸ்தான் அணி, முகமது ரஸ்வான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு வெள்ளைப் பந்து வடிவ கிரிக்கெட்டில் சில வெற்றிகளை பெற ஆரம்பித்திருக்கிறது. இருப்பினும் அந்த அணியின் மிடில் வரிசை பேட்டிங் ஆர்டர் இன்னும் சிக்கலாக இருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காண்பதற்கே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் தங்களது அணி பட்டியலை வெளியிட மறுக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த சிக்கலை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” பாகிஸ்தான் அணிக்கு தற்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களது மிகப்பெரிய பிரச்சனை சைம் அயூப்தான். அவரது உடற்தகுதி குறித்த எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. எனவே நான் பார்த்த விஷயங்களை மட்டுமே வைத்து பேசி வருகிறேன். இருந்தாலும் இது முற்றிலும் தவறு என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால் அவர்களது மிடில் வரிசை பேட்டிங் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது.

இதையும் படிங்க:எதுக்கு வருத்தப்படணும்.. சாம்பியன்ஸ் டிராபிக்கு நான் ஏன் இல்லைனு நல்லா தெரியும் – சூரியகுமார் யாதவ் பேட்டி

அவர்கள் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் பந்துகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்திய அணிக்கு எதிராக மட்டுமே சுழல் தாக்குதலாக இருக்கும். மீதமுள்ளவைகளில் சுழற் பந்து வீச்சுக்கு பெரிதாக எந்த பங்கையும் நான் பார்க்கவில்லை. பாகிஸ்தானில் 5, 6 மற்றும் 7ம் நிலை வீரர்கள் தான் சந்தேகத்தினை ஏற்படுத்துகிறார்கள். அதனால்தான் சவுத் சகீல் சேர்க்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன்” என பசித் அலி கூறி இருக்கிறார்

- Advertisement -