இந்திய கிரிக்கெட்

என்ன கம்பீர் இது.. வெறும் 27 ஓவருக்கே இப்படியா?. ODI கிரிக்கெட்ல கூட இதை யாருமே செய்யல – ஆகாஷ் சோப்ரா

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 159 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 55 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

இதில் இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதுகுறித்து முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணி முதல் அமர்வு முடிவில் பயன்படுத்திய பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு காலத்தில் அணிகள் நான்கு பந்துவீச்சாளர்களுடன் விளையாடும். எப்போதாவது ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் காலம் இருந்தது. அதற்குப் பின்னர் விராட் கோலி உள்ளே வந்து நான் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவேன் என்று கூறினார். அவர் அந்த டெம்ப்ளேட்டை உருவாக்கினார். ஆனால் இப்போதைய புதிய ஆட்சிக்கு ஆறு பந்துவீச்சாளர்கள் தேவை. இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் மற்றும் டி20 வகை தேர்வுக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

இதையும் படிங்க:சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது.. நான் கேப்டன் கிடையாது.. பும்ரா தடாலடி பேச்சு

இந்த போட்டி முடிந்ததும் குறைந்தது இரண்டு பந்துவீச்சாளர்கள் ஆவது பயன்படுத்தப்படவில்லை என்று பேசுவோம். முதல் இன்னிங்ஸ் முடிவில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு ஓவர்கள் மட்டும் பந்து வீசினார். நாங்கள் என்ன செய்கிறோம்? முதல் அமர்வு முடிவில் 27 ஓவர்கள் வீசியபோது 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினோம். இதை நாங்கள் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கூட பயன்படுத்துவதில்லை” என்று ஆகாஷ் ஜோப்ரா பேசியிருக்கிறார். கம்பீர் பயிற்சியாளர் ஆன பிறகு இந்த புதிய வகையான யோசனைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by