ஐபிஎல் 2024

விராட் கோலி வேண்டாம்.. ஆர்சிபி அணிக்கு இவரை கேப்டன் ஆக்குங்க.. சிறந்த எதிர்காலம் இருக்கு – ராபின் உத்தப்பா பேட்டி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஆக விராட் கோலி வழி நடத்திய நிலையில் அவருக்குப் பிறகு பாப் டூ பிளசிஸ் சில ஆண்டுகள் பெங்களூர் அணியை வழிநடத்தினார். தற்போது பெங்களூர் அணி பிளசிஸை கழட்டி விட்டு விராட் கோலி உட்பட 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அடுத்த கேப்டன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

பெங்களூர் அணியின் புதிய கேப்டன்

ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டதிலிருந்தே வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கும்ப்ளே முதல் டூபிளசிஸ் வரை அனைவரும் ஆர்சிபி அணியை வழிநடத்தி இருக்கின்றனர். இருப்பினும் அந்த அணிக்கு கடந்த 17 வருடங்களாக ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதில் கேப்டனாக விராட் கோலியின் தலைமையில் பல வருடங்கள் செயல்பட்ட பெங்களூர் அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றாலும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் அடுத்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக பெங்களூர் அணி விராட் கோலி, யஷ் தயால் ரஜத் பட்டிதார் உட்பட மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவரையே பெங்களூர் அணி கேப்டன் ஆக நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ரஜத் பட்டிதார் பெங்களூர் அணியின் வருங்கால கேப்டனாக சிறந்த தேர்வாக இருப்பார் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுங்க

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரஜித் பட்டிதாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பட்டிதார் அந்த பொறுப்பை ஏற்கக் காரணம் பெங்களூர் அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய தலைவர் தேவைப்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தகுந்தவாறு அவரை கேப்டனாக நியமிக்க இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:ஷமி வந்துட்டார்னு கொண்டாடுறாங்க.. ஆனா பாவம் ஐபிஎல்ல அவருக்கு இந்த பிரச்சனை இருக்கு – மஞ்ச்ரேக்கர் கருத்து

ரஜத் பட்டிதார் பெங்களூர் அணியை நிர்வகிக்க கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக விளையாடத் துவங்கிய பட்டிதார் 2022ஆம் ஆண்டு எட்டு போட்டிகளில் விளையாடி 333 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு காயம் காரணமாக கடந்த ஆண்டு விளையாடாத நிலையில் 2024ஆம் ஆண்டு 15 போட்டிகளில் விளையாடி 395 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts