சஞ்சு சாம்சன் எப்படி விளையாடுவது என்கின்ற சிறப்பான அதிர்ச்சியை அடைந்து விட்டார் என்றும் அவரால் சில விஷயத்தை செய்ய முடியாது என்றும் கூறி ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மெகா ஏலத்திற்கு முன்பாக கழட்டி விடப்பட்டார். இந்த நிலையில் தன்னுடைய ஐபிஎல் கேப்டன் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது குறித்து மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
சஞ்சு சாம்சனின் ஐபிஎல் உள்ளே வெளியே
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வலிமையான அணியை உருவாக்குவதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களை வாங்க வேண்டும் என சஞ்சு சாம்சன் முடிவு செய்து அவர்களை ஏலத்தில் வாங்கினார்.
அதே நேரத்தில் இந்த ஆண்டு வீரர்களை தக்க வைப்பதில் சஞ்சு சாம்சனின் தலையீடு அதிக அளவில் இருந்ததாக, அந்த அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து இருந்தார். இந்த முறை ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரியான அனுபவ வீரர்களை சஞ்சு சாம்சன் தக்க வைத்துக் கொள்ள முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன் இந்த இரண்டு காரியங்களை செய்ய மாட்டார்
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் டி20யில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் பற்றி பேசி உள்ள அஸ்வின் கூறும்பொழுது “நான் சாம்சன் பற்றி என்ன நினைக்கிறேன் என்றால், அவர் மெதுவாக விளையாடி ரன்கள் எடுக்க மாட்டார். மேலும் அழுக்கான ரன்களையும் எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அவரால் இந்த இரண்டையும் செய்ய முடியாது.சஞ்சு மெதுவாக விளையாட மாட்டார். அவர் அடித்தால் ஆஹா என இருக்கும். மீண்டும் எதிரணியை முற்றிலும் வீழ்த்திய ஒரு இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார்”
இதையும் படிங்க : நானா இருந்தா ரோகித் இடத்தில்.. இவரை கேப்டனா ஆக்குவேன்.. என்னை மாதிரி அத செய்யலாம் – ரிக்கி பாண்டிங் கருத்து
“சஞ்சு சாம்சன் சிறந்த முறைக்கு திரும்பி இருப்பது ஸ்வீட் ஸ்பாட்டை கண்டுபிடிப்பது பற்றியது. அவர் இந்த நிலையை எப்படி கண்டுபிடித்தார் என்றால், அவருக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டு இருக்கிறது ஆனால் கண்டுபிடித்து விட்டார். இனிஅவர் பெரிய உயரத்தில் இருப்பார். அவருடைய வெற்றியில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






