அஸ்வினை தப்பா கணக்கு போடறாங்க.. இந்த 3 விஷயத்தை பார்த்தா புரியும் – பங்களாதேஷ் தமிம் இக்பால் பேட்டி

0
67
Ashwin

நேற்று தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய ரவிச்சந்திரன் அஸ்வினை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என பங்களாதேஷ் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் கூறியிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆரம்ப காலகட்டத்தில் பேட்ஸ்மேனாக வருவதற்கு பயிற்சி எடுத்தவர். பின் நாட்களில் அவர் கையில் இருந்து சுழல் பந்து வீச்சு நன்றாக வருகின்ற காரணத்தினால், பந்துவீச்சில் கவனம் செலுத்தி தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஆபத்பாந்தவன் அஸ்வின்

இந்திய அணியை கடந்த நான்கு வருடங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கீழ் வரிசையில் விளையாடும் பேட்ஸ்மேன்களே பெருமளவில் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இதில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் அக்சர் பட்டேல் நால்வரும் மிகவும் முக்கியமானவர்கள். மேல் வரிசையில் இருந்து ரன்கள் மிக குறைவாகவே வந்திருக்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரையில் ஆறு சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பேட்டிங் செய்வதற்கு கடினமான சூழ்நிலையில் இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்த நெருக்கடியான நேரத்தில் உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி சதம் அடித்து இந்திய அணியை மீட்டார்.

- Advertisement -

அஸ்வினை குறைவாக மதிப்பிடுகிறார்கள்

அஸ்வின் பேட்டிங் குறித்து பேசி இருக்கும் தமிம் இக்பால் கூறும்பொழுது “கண்டிப்பாக பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்திருக்கும் சாதனைகள் குறித்து நாம் நிறைய பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் பந்துவீச்சில் எவ்வளவு சிறப்பாக இருக்கிறார் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். தனிப்பட்ட முறையில் பேட்ஸ்மேனாக ரவிச்சந்திரன் அஸ்வின் குறைவாக மதிப்பிடப்பட்டவர் என்று நான் உணர்கிறேன்”

இதையும் படிங்க : 1740 நாட்கள்.. 94 பந்தில் சஞ்சு சாம்சன் தரமான சம்பவம்.. அகர்கர் கம்பீருக்கு அனுப்பிய செய்தி.. துலீப் டிராபி 2024

“ஒரு பேட்ஸ்மேனாக அவருடைய ரன் சராசரி 24 ஆக இருக்கலாம். ஆனால் அவர் ஷாட் ஆடும் விதம், அவருடைய பேலன்ஸ் மற்றும் பேட் ஸ்விங் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ப்ராப்பர் பேட்ஸ்மேன் போல அவர் விளையாடுகிறார். இந்திய அணி நெருக்கடியாக இருக்கும் சமயத்தில் எல்லாம் காப்பாற்ற கூடியவராக இருந்து வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -