ஸ்மித் பிரச்சனை இதுதான்.. ஆனால் கோலி இந்த இரண்டுக்கும் நடுவில் தடுமாறுகிறார் – கிரேக் சேப்பல் பேட்டி

0
140
Smith

தற்போது உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் பிரச்சனைகள் பற்றி ஆஸ்திரேலியா லெஜெண்ட் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் பேசியிருக்கிறார்.

விராட் கோலியின் பேட்டிங் சரிவு பற்றி பெரிதாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஸ்மித் பேட்டிங் ஃபாமும் சில காலமாக சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவர்களது பேட்டிங் பிரச்சனை என்னவென்று கிரேக் சேப்பல் மிக ஆழமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த மூவருக்கும் சொல்ல தேவை இல்லை

இந்த நிலையில் விராட் கோலி ஸ்மித் மற்றும் ஜோ ரூட் போன்ற வீரர்கள் எந்த நேரத்தில் ஓய்வு பெற வேண்டும் என்று சரியாக தெரிந்தவர்கள் என்றும், அது குறித்து இந்த மூவருக்கும் யாரும் சொல்லத் தேவையில்லை என்றும் கிரேக் சேப்பல் பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசி இருக்கும் கிரேக் சேப்பல் கூறும்பொழுது ” விராட் கோலி, ஸ்மித் மற்றும் ரூட் போன்றவர்களுக்கு பேட்டிங்கில் ஏற்படும் சரிவு என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்று கிடையாது. இது அவர்களுடைய பேட்டிங் அணுகு முறையில் மாற்றம் செய்யவும், அவர்களுடைய உள்ளார்ந்த மேலாதிக்கத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் வருகின்ற எச்சரிக்கை!”

- Advertisement -

இருவரின் பிரச்சனை இதுதான்

“விராட் கோலி தற்போது வித்தியாசமாக ஒரு இன்னிங்ஸை உருவாக்குகிறார். முன்பு அவரிடம் இருந்த சரளத்தை பெறுவதற்கு அவருக்கு இப்போது 20 முதல் 30 ரன்கள் தேவையாக இருக்கிறது. ஒரு தடகள வீரருக்கு தேவையே நம்பிக்கைதான். அந்த இடத்தில் சந்தேகம் வரும் பொழுது அதை ஆதிக்கம் செலுத்துவதற்கான தெளிவை சீர்குலைக்கிறது. விராட் கோலி தற்பொழுது தாக்கி விளையாடுவதற்கும் தற்காத்து விளையாடுவதற்கும் நடுவில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்”

இதையும் படிங்க : நீங்க பழைய மாதிரி வரணும் விராட்.. அதுக்கு இந்த ரெண்டு விஷயத்தை மட்டும் செய்யுங்க – புஜாரா வேண்டுகோள்

“ஸ்மித்துக்கு பிரச்சனை உடலைவிட மனதில்தான் அதிகமாக இருக்கிறது. சோர்வு என்பது உடல் மற்றும் மனதிற்கு ஒரு அமைதியான எதிரி. ஸ்மித் ஒரு நீண்ட எண்ணிக்கை விளையாடுவதற்கு ரேஸர் போன்ற கூர்மையான கவனத்தைக் கொடுப்பது அவருக்கு பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் சக அணி வீரர்களுக்கு உரிய போலவே இருக்கிறது. இது ஒரு உணர்ச்சிகரமான எண்ணிக்கையை அதிகரிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -