ஆஸி டெஸ்ட் தொடர்.. ரோகித்தோட இந்த முடிவு பிரச்னையாகும்.. நானா இருந்தா அவர விட்ருக்க மாட்டேன் – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

0
373

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பிறகு வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமியன் ப்ளமிங் இந்திய வீரர் குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியாவில் வருகிற நவம்பர் மாதத்தில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் கணிசமான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கென ஆஸ்திரேலிய அணியும் மிக்க தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டு வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்தில் இருந்து குணமாகி இருந்தாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அளவுக்கு அவர் உடற் தகுதி பெறவில்லை. இதனால் 18 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டேமியன் பிளமிங் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரையிலும் ஷமி உடல் தகுதி பெறவில்லை என்றாலும் நான் அவரை இங்கு அழைத்து வந்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

கட்டாயம் இங்கு அழைத்து வந்திருப்பேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “முகமது ஷமியை விலக்கி இருக்கும் இந்திய நிர்வாகத்தின் முடிவு அவர்கள் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக சேதப்படுத்துகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரையிலும் விளையாடுவதற்கு தகுதியற்றவராக இருந்தாலும் ஷமியை இங்கு அழைத்து வந்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:வெறும் 3.1 ஓவர்.. பாக் அணி வரலாற்று வெற்றி.. WTC புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு பின்னடைவு

முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக விளையாடினார். அதற்குப் பிறகு காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது வரை சர்வதேச அணியில் இடம் பெறவில்லை. தற்போது சமி இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் இந்திய பிளேயிங் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. மேலும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்த தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே சிராஜ், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் கூட்டணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -