இந்திய தொடருக்கு ஆள் வேணுமா.. தயாரா இருக்கேன்.. ஏன்னா ஆஸி பிளேயர்ஸும் நானும் இப்போ இதுல ஒன்னுதான் – வார்னர் பேட்டி

0
389

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே வருகிற நவம்பர் மாதத்தில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதற்கு முன்னதாக ஷெப்பீல்ட் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் ஒரு ஆச்சரியமான செய்தியை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி தீவரம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியிடம் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இருக்கும் நிலையில் தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியாவிலிருந்து கோப்பையை கைப்பற்ற மிகத் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் தொடக்க இடம் ஆஸ்திரேலியாவுக்கு சிறிய பிரச்சனையாக உள்ளது.

அந்த அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்மித் தொடக்க இடத்தில் களமிறங்கினாலும் அது அவருக்கு கை கொடுக்காமல் போக திரும்பவும் மிடில் வரிசைக்கே பேட்டிங்கில் செயல்படுவார் என்று அணியின் கேப்டன் கம்மின்ஸ் அறிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் ஆஸ்திரேலியா அணி விரும்பினால் ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

எப்போதும் தயாராக இருக்கிறேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் தொலைபேசியில் எடுத்துப் பேசும் அளவிற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். உண்மையைச் சொல்வதென்றால் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கின்றனர். கிட்டத்தட்ட நானும் இதே நிலையில்தான் இருக்கிறேன்.

இதையும் படிங்க:சர்பராஸ் கானுக்கு இந்த பலவீனம் இருக்கு.. எங்க நாட்டுல தடுமாறுவாரு.. ஆனா கேஎல் ராகுல் வேணாம் – பிராட் ஹாக் பேட்டி

உண்மையாகவே அடுத்த தொடருக்கு நான் தேவைப்பட்டிருந்தால் அடுத்த ஷீல்டு விளையாட்டை விளையாடிவிட்டு ஆஸ்திரேலியா விளையாடும் அடுத்த தொடரில் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் சரியான காரணங்களுக்காக ஓய்வு பெற்று விளையாட்டை முடிக்க விரும்பினேன். ஆஸ்திரேலிய அணிக்கு யாரேனும் அவசரமாக தேவைப்பட்டால் எனது கை எப்பொழுதும் ஓங்கி உள்ளது” என்று கூறியிருக்கிறார். அதாவது இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வார்னர் ஆர்வமாக இருப்பதாக தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வருகிற நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -