தயவு செஞ்சு அவரை நீக்குங்க.. பும்ரா அணியை ஜெயிக்க இத செஞ்சாதான் சாத்தியம் – ஆஸி ஜான்சன் பேட்டி

0
1522

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஆறாம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா அணி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் மிச்சல் ஜான்சன் ஆஸ்திரேலியா வெற்றி பெற முக்கிய பேட்ஸ்மேன் ஒருவரை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

அணியை விட்டு நீக்குங்க

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஓரளவு பந்துவீச்சில் நன்றாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே மிகவும் மோசமாக செயல்பட்டது.

அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படும் மார்னஸ் லாபுசேன் முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 ரன்னும் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அது மட்டுமல்லாமல் கடந்த பத்து இன்னிங்ஸ்கலில் அவர் அதிகபட்சமாக 10 ரன்கள் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட வேண்டும் எனவும், ஆஸ்திரேலியா உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜான்சன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “லாபுசேனின் மோசமான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இரண்டாவது போட்டியில் அவர் மாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டத்தில் அவரது சிறப்பான பேட்டிங் வெளிவர வேண்டும் என்று நம்புகிறேன். சொந்த நாட்டிற்காக விளையாடும் அழுத்தத்தில் இருந்து விலகி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி அவர் தன்னை மீட்டு எடுப்பார். பும்ரா மற்றும் அவரது அணிக்கு எதிராக அழுத்தமான சூழ்நிலையில் இருந்து விலகி அவர் பலன் பெறுவார்.

இதையும் படிங்க:நான் மனசு உடைஞ்சு போய் இருக்கேன்.. மக்கள் அந்த மாதிரி கேட்கிறது தாங்க முடியல – பிரித்வி ஷா பேட்டி

சிலர் சொல்வார்கள் இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் உள்ளது அதில் சிறப்பாக விளையாடுவார் என்று கூறுவார்கள். ஆனால் அவர் கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே 10 ரன்னைத் தாண்டி இருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் ஒரு கட்டத்தில் கைவிடப்படுவார்கள் ஆனால் அதிலிருந்து எப்படி மீண்டு வருவார்கள் என்பதே முக்கியமான விஷயம். இப்போது இந்திய அணியின் கை பெரிதாக இருக்கும் நிலையில் புதிய வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்குள் வருவது அவர்களை ஒன்றிணைக்கும். ஒரு புதிய பேட்ஸ்மேன் தோல்வியை சந்திக்காமல் உள்ளே வரும்போது அவர் அழுத்தம் இன்றி விளையாடி சிறப்பாக செயல்பட முடியும்”என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -