இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி நாளை மதியம் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த போட்டி குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கனவே விளையாடிய முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வலுவான நிலையில் இரண்டாவது ஆட்டத்தை எதிர்கொள்ள உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
மேலும் ஐசிசி தொடரை பொறுத்தவரையிலும் இந்த இரண்டு அணிகள் விளையாடிய ஆட்டங்களில் இந்திய அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் மட்டும் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2023ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையிலும், 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறும்போது “கடந்த 12 மாதங்களை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குளிர்ச்சியான நிலையில் இருக்கிறது. அவர்கள் நல்ல விஷயங்களை செய்வதில் சிறப்பானவர்கள். எனவே பாகிஸ்தான் அணி என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியாத ஒன்றாகும். எனவே பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அது ஆச்சரியப்படக் கூடிய விஷயமாக இருக்காது. இது மற்ற கிரிக்கெட் போட்டிகளை விட ஒரு பெரிய நிகழ்வாகும்.
இதையும் படிங்க:நானே சொல்றேன்.. எங்க பாகிஸ்தான் அணியை விட இந்தியா பலமானது.. துயரமான காரணம் இதான் – ஷாகித் அப்ரிடி பேட்டி
இது ஒரு உலகளாவிய மற்றும் கணிக்க முடியாத நிகழ்வாக இருக்கும். இரண்டு அணிகளிடமும் நிறைய திறமைகள் இருக்கின்றன. முடிவு என்னவாக இருக்கும் என்று உண்மையாக தெரியாது. டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் கிரிக்கெட் மிகவும் கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு நபர் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியில் செல்வாக்கு செலுத்த முடியும்” என்று கூறி இருக்கிறார். எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? அல்லது பாகிஸ்தான் அணி வெற்றி பெறுமா? என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.