விராட் ரோகித்துக்கு இனி கஷ்ட காலம்.. கம்பீர் இந்த விஷயத்துல 2 பேரையும் விட மாட்டார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
141
Rohit

டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் செப்டம்பர் மாதம் திரும்புவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் மீண்டும் வந்து இலங்கைக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார்கள். தற்போது இது குறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாகப் பேசியிருக்கிறார்.

இந்திய அணி உள்நாட்டில் அடுத்து செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படியான நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் திரும்பி வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்திலேயே பிரச்சனைகள் வேண்டாம் என்கின்ற காரணத்தினால் இருவருமே இந்திய அணிக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணியிடம் இருந்தது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” இந்திய அணி முன்னோக்கி செல்லும் பாதை என்னவாக இருக்கும்? அதனுடைய ப்ளூ பிரிண்ட் என்னவாக இருக்கும்? என்று நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி காலத்தில் முக்கியத்துவம் இல்லாத சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பெரிய வீரர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் அப்படியான தொடர்கள் நடக்கும்போது அருகில் எந்த உலகக் கோப்பை தொடரும் இருக்காது.

அதே சமயத்தில் கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் அழைத்து வந்தார். ஓய்வு கேட்ட அவர்களுக்கு ஓய்வு கிடைக்கவில்லை. அதே சமயத்தில் அருகில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இருப்பதாக நமக்கு தெரியும்.

- Advertisement -

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆறு மாதங்கள் கழித்து நடக்க இருக்கிறது. இவ்வளவு இடைவெளி இருக்கின்ற காரணத்தினால் இப்பொழுது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதால் அது எந்த தாக்கத்தையும் உருவாக்கப் போவதில்லை. மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி தேர்வில் மற்றும் வீரர்களின் செயல் திறனில் இது எந்த மாற்றத்தையும் கொண்டும் வராது.

இதையும் படிங்க : 3 பேர் இந்திய அணிக்கு விளையாடலனா.. பாகிஸ்தான் சும்மா தோற்கடிக்கும் – பாக் தன்வீர் அகமத் சவால்

தற்போது இலங்கை தொடர் முடிந்து தொடர்ச்சியாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கிரிக்கெட் விளையாட வேண்டி இருக்கிறது. ஏறக்குறைய அவர்கள் 10 டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும். அவர்கள் எல்லா போட்டிகளிலுமே விளையாடியே ஆக வேண்டும். கம்பீர் இப்பொழுது நீங்கள் விளையாடும் படி இருந்தால் விளையாடி தான் ஆக வேண்டும், இந்தியாவுக்காக விளையாடுவதை உங்களால் தவிர்க்க முடியாது என்பதை கூறியிருக்கிறார். இனி சீனியர் வீரர்கள் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் கூட விளையாடித்தான் ஆக வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.